Blogger templates

தடையறத் தாக்க..விமர்சனம்


தடையறத் தாக்க..

கந்த சஷ்டி கவசத்திலிருந்து குரு காக்க காக்க எடுத்தார் என்றால் சிஷ்யன் அடுத்த வரியை எடுத்திருக்கிறார். கதையும் அதைப் போலவே ரவுடிகளைச் சுற்றி வரும் ஒரு த்ரில்லர். முதல் படமான முன் தினம் பார்த்தேனேவில் கவனிக்கப்படாமல் போனவர் இயக்குனர் மகிழ் திருமேனி.


அருண் விஜய் ஒரு டிராவல்ஸ் ஓனர். அவர் பாட்டுக்கு சிவனே என்று தான் உண்டு தன் வேலையுண்டு என்று மம்தா மோகந்தாசை லவ்விக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் வேலையில். ஏரியா தாதாக்களான மகாவை கொலை செய்த பழி அருண் மீது விழுகிறது. டெரரான தாதாவான அவனின் தம்பி குமார் அவனை சும்மா விடுவானா? என்ன செய்தான்? அவர்களிடமிருந்து அருண் விஜய் எப்படி தப்பினார் என்பதுதான் கதை. அதை மிகச் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
அருண் விஜய் ஆள் அழகாய் இருக்கிறார். நடிப்பும் நன்றாகவே வருகிறது. சண்டைக் காட்சிகளில் நல்ல வேகமிருக்கிறது. ரொம்ப நாளாகவே வர மறுத்த வெற்றி இப்படத்தின் மூலமாய் வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மம்தாவுடனான காதல் காட்சிகளிலும் சரி, ஆக்‌ஷன் காட்சிகளிலும் சரி நன்றாக செய்திருக்கிறார். வழக்கமாய் வரும் கதாநாயக அறிமுகக் காட்சிப் போல இல்லாமல் தன்னைப் பற்றி மம்தாவின் அப்பாவிடம் ஒப்பிப்பது போல சொல்லி பெண் கேட்கும் காட்சியிலிருந்து, க்ளைமாக்ஸ் வரைக்கும் கண்ட்ரோல்ட் பர்பாமென்ஸ்.

மம்தா மோகந்தாஸ் ரொம்ப நாளைக்கு பிறகு தமிழில். கதையில் வரும் காதல் எபிசோடுக்குத்தான் என்றாலும், க்யூடாய், செக்ஸியாய் காதல் செய்கிறார். தன்னை ஸ்லிப்பில் பார்த்தும் ஏதும் செய்யாத காதலனை நினைத்து புகைவதாகட்டும், ஏழு நாளைக்கு ஏழுவிதமான் லிங்கேரே வகை உள்ளாடைகளை கொடுத்ததை நினைத்து வெட்கத்துடன் புன்னகைக்குமிடம் கொஞ்சம் ஓவர் என்றாலும், இன்றைய இளைஞர்களிடையே பச்சென ஒட்டிக் கொள்ளும். நீட் பெர்பாமென்ஸ்.
படத்தில் டெரர் வில்லன்களாய் வலம் வரும் மகா, குமார் ஆகியோரின் கேரக்டரைஷேஷன்கள், அவர்களின் பின்புலம், மகாவின் பின் இருக்கும் ஒரு வக்கிரத்தனம், குமாரின் குரூரம், என்று செய்யப்படும் பில்டப்புகள் அக்கேரக்டர்களின் மீது ஏற்படும் பயத்திற்கு சரியான காட்சிகள்.  வம்சி கிருஷ்ணாவின் முகம் ஹீரோவைப் போல் இருந்தாலும், அம்முகத்திற்கான காரணத்தினால் நச்சென ஒட்டிக் கொள்கிறார். அதே போல மகா காந்தியும்.

எஸ்.தமனின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள்தான். அதுவும் முதல் பாதியிலேயே வந்து விடுவதால் படத்தில் சுவாரஸ்ய இடைஞ்சலாய் இல்லாததால் குட். ஆனால் பின்னணியிசையில் நன்றாக உழைத்திருக்கிறார். மைனா சுகுமார் தான் ஒளிப்பதிவு. இரவு நேரக் காட்சிகளில் லைட்டிங் அருமை. அதே போல குறிப்பிடத்தக்கது பிரவீன் - ஸ்ரீகாந்தின் எடிட்டிங் செம க்ரிஸ்பாக இருக்கிறது.
எழுதி இயக்கியவர் மகிழ் திருமேனி. வழக்கமான ரவுடிக் கும்பல் அதில் மாட்டிக் கொள்ளும் ஹீரோ ப்ராண்ட் கதை தான் என்றாலும் அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கியதில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். காமெடிக்கென்று தனியாய் ஏதும் செய்யாமல் அருண் விஜய்யின் நண்பர்களை வைத்து மிக இயல்பாய் காமெடியை நுழைத்ததும், மிக நுணுக்கமான வில்லன் கேரக்டர்களுக்கான காரணங்களை ஆங்காங்கே சொல்லியதும் நல்ல டெக்னிக். ஓரிரு காட்சிகளில் ஓவர் வயலன்ஸ். ஆனால் அவை படத்திற்கு ஒரு டெரர் எபெக்ட்டை கொடுத்தது என்னவோ உண்மைதான்.   மகாவின் ரகசிய காதலி, மகாவின் தம்பி குமார், அல்லக்கை ரவுடி, எம்.எல்.ஏ, என்று சின்னச் சின்ன கேரக்டர்களாய் இருந்தாலும் அவர்களை வைத்து கதையை நகர்த்திய விதம் எல்லாம் நன்றாகவேயிருக்கிறது.

குறையென்று பார்த்தால் இடைவேளைக்கு பிறகு த்ரில்லர் நாவலில் கதை முடியப் போகும் போது கதையில் உள்ள கேரக்டர்களே காரணங்களைச் சொல்லி கதையை முடிக்குமே அது போல சட்டு சட்டென கேரக்டர்கள் பல ட்விஸ்டுகளை கொடுப்பதும், அதை அவர்களே சொல்வதும், அருண் விஜய் ரவுடி மகாவை கொன்றிருக்கலாம் என்று குழப்ப, மகாவின் முக்கிய அல்லக்கையை முகம் மறைத்து அருண் விஜய் அடித்து துவைப்பது நல்ல காட்சி தான் என்றாலும், அருண் விஜய் ஏன் அந்த ரவுடியை அடித்து வீழ்த்தினார்? அதே போல ஒரே நேரத்தில் நாற்பது பேரை வெட்டி வீழ்த்தும் காட்சிகள் மசாலாதனத்தையும், மகாவின் காதலியை பற்றிய ரகசியத்தை ரொம்ப நேரத்திற்கு பில்டப் செய்வதும், அப்பெண்ணை தான் ஏன் கடத்தி வந்தேன் என்று மகா சொல்லும் காரணம் எல்லாம் அந்நேர விறுவிறுப்புக்கு ஓகே என்றாலும் லாஜிக்கலி மைனஸ் தான். மற்றபடி தடையறத் தாக்க சுவாரஸ்யமான ஆக்‌ஷன் த்ரில்லர்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 comments: