Blogger templates

கணித திறமையை வளர்த்துக் கொள்ள

உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை
படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்ற தலைப்புகளின் கீழ் கணக்குகள் நிறைய உள்ளன.
கணித விடுகதைகள் எனும் தலைப்பில் பண்ணாங்குழி(Mancala), நகரும் செங்கல்(Sliding Block), சுடோக்கு(Sudoku), மணிச்சட்டம்(Battleship), நாணய எடை(Coin Weighing), கியூப்(Cube), என்பது போன்ற 18 வழிமுறைகளின் கீழ் பல கணக்குகள் தரப்பட்டுள்ளன. இத்தளத்தில் கணக்கு பயிற்சியாளர்(Math Apprentice), கணக்கு பணித்தாள்(Maths Worksheets), மின்னட்டை(Flash Cards) மற்றும் சில தலைப்புகளின் கீழ் விளையாட்டு வழியில் எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும் சிறப்பான இணையதளம் இது.

இணையதள முகவரி: www.mathplayground.com

இந்த இணையதளத்தை பயன்படுத்திய பின், உங்கள் குழந்தைக்கு கணிதத்தில் ஆர்வம் தானாகவே வந்துவிடும்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment