DVD Drive இல்லாத, DVD Drive வேலை செய்யாத Laptap, Pc போன்றவைகளுக்கு
எவ்வாறு window 7 OS நிறுவுவது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது. நேரடியாக ISO கோப்பினை USB யில் copy செய்து, உபயோகிக்க முடியாது. USB யை bootable ஆக மாற்ற வேண்டும். இதற்கென எளிதான மென்பொருளை MicroSoft அளித்துள்ளது
Windows 7 USB/DVD Download Tool. அதை இங்கு கிளிக் செய்து Download செய்து கொள்ளுங்கள். இதனை திறக்கும் போது வரும் முதல் விண்டோவில் Browse கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள Windows7 இன் ISO கோப்பினை கொடுக்கவும். பின்னர் 'Next' கிளிக் செய்யுங்கள்.

USB யை டிரைவில் பொருத்தி விட்டு, அடுத்த விண்டோவில் 'USB Device' கிளிக் செய்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் குறைந்து 4GBஅளவுள்ள USB உபயோகப்படுத்துங்கள்.

சில நிமிடங்களில் COPY செய்து முடித்துவிடும். இப்போது உங்கள்Windows7 இன்ஸ்டாலேஷன் USB தயார் ஆகிவிடும்.
இப்போது நீங்கள் BIOS SETUPஇனுள் செல்லவேண்டும். BIOS இல் உள்ள BIOS SETUP இற்குச் சென்று அங்கு FIRST BOOT DEVICE ஆக USB Drive ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.
அதன் பின் செய்த மாற்றத்தை SAVE பண்ணவேண்டும். இதற்காக F10கீயை அழுத்தத் வேண்டும். இப்போது நீங்கள் செய்த மாற்றம் சரியா என்ற வினா கேக்கப்படும். அதற்கு ’Y’ என்பதை அழுத்தி ENTERபண்ணினால் போதும் செய்த மாற்றங்கள் பதிவாகிடும். இப்போது விண்டோஸ் இயங்குதளம் நிறுவ ஆரிம்பித்துவிடும். அதனைத் தொடர வேண்டியதுதான்..
Windows 7 Crack பண்ணுவது எப்படி இங்கே கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்



மதிபிற்குரியவரே,
ReplyDeleteஒரு நண்பர் கம்ப்யூட்டர் மெக்கானிக் மூலம் 2012 நவம்பர் மாதம் புதிய கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்த Desktop Computer வாங்கினேன். கம்பெனியின் பெயர் acer அந்த நண்பர் கொடுத்தார். என்னிடம் install windows7 professional CD தரவில்லை. அவர் சொந்த ஊருக்கு நிரந்தரமாக சென்றுவிட்டார். அவர் install செய்தது windows7 professional.
உங்களது கட்டுரைகளை இணையம் மூலம் படித்து பிறகு நாமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் என்னுடைய கம்ப்யூட்டர் எதாவதுபிரச்சினை என்றால், நானே எப்படி windows7 professional install செய்வது என்னிடம் windows7 professional CD கூட இல்லை.
கடையில் windows7 professional CD வாங்குவது என்றால் என்ன version சொல்லி வாங்க வேண்டும். அந்த CD வாங்க வேண்டுமா அல்லது window home premium வாங்க வேண்டுமா. அதை எப்படி install செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு எளிமையாக இணையத்தில் எழுத்து மூலமாக சொல்லித் தர வேண்டும்.
சிறு சிறு தொகுப்பகக்கூட எழுதினால் போதும் என்னுடைய Email ID senthilnathanpts@gmail.com.
என்றாவது ஒரு நாள் கம்ப்யூட்டர் பிரச்சினை ஏற்பட்டு நீங்கள் சொல்லிக் கொடுத்த மாதிரி install செய்து அது success ஆகிவிட்டால் எனது சந்தோஷத்தை எழுத்து மூலமாக முதலில் உங்களிடம் தான் பகிர்ந்துக்கொள்வேன்.
குறிப்பு:
Windows install செய்யும்போது internet on செய்து இருக்கவேண்டுமா அல்லது off செய்து இருக்கவேண்டுமா என்பதை சொல்லவேண்டும். கம்ப்யூட்டரில் அ ஆவன்னா கூட எனக்கு தெரியாது. ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.
நீங்கள் எனக்கு கற்றுத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.
புகப்பகக்கலைஞர் திரு. ஜி. வெங்கட்ராம் எழுதியது.
தப்பான பாதையில் போயிக்கிட்டிருக்கோம்னு தெரிந்த வினாடியில் திரும்பிடனும். அங்கிருந்தே புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும். இவ்வளவு தூரம் வந்துட்டோம், இதே பாதையில் போயிடலாம்னு போயிட்டே இருந்தா வாழ்ந்த வாழ்க்கை திருப்தி இருக்காது கிடைச்சதை அமைதியா ஏத்துக்கிட்டு வாழமை பிடிச்ச்சதுக்காக போராடி வாழும் போது கிடைக்கற மனநிறைவுக்கு விலையே இல்லை. அப்படி ஒரு திருப்தியோடு வாழ்ந்தால் இதை உறுருதியா சொல்கிறேன்.