Blogger templates

கூகுளின் மதிப்பு மிக்க இலவச ஜி.ட்ரைவ் சேவை!

வெகுகாலமாகப் பேசப்பட்டு வந்த, இலவசமாக பைல்களைப் பதிந்து தேக்கி வைத்திட வழி தரும் ஜி-ட்ரைவ் வெகு விரைவில் புழக்கத்தில் வர இருக்கிறது. கூகுள் கம்ப்யூட்டிங் உலகத்தில், இது இன்னும் ஒரு மதிப்பு மிக்க சேவையாக இருக்கும். கூகுள் ஏற்கனவே தன் ஜிமெயில் சேவையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 7 ஜிபி
அளவில் டிஸ்க் இடத்தைத் தந்து மெயில்களைப் பாதுகாக்கும் வசதியைத் தந்து வருகிறது. இப்போது, பல நாட்களாகப் பேசப்பட்டு வந்த, இலவச கிளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் வசதியையும் தர இருக்கிறது. இதன்படி ஒவ்வொருவருக்கும் இலவசமாக 5 ஜிபி கொள்ளளவு இடம் உள்ள ட்ரைவ் இடம் தரப்படும். இதில் நாம் நம் பைல்களை சேமித்துப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இந்த அளவு தொடர்ந்து அதிகப்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த ட்ரைவில் உள்ள பைல்களை, டெஸ்க்டாப், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள் வழியாக அணுகி டவுண்லோட் செய்து கொள்ளலாம். drive.google.com தளம் சென்று இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் தன் எம்.எஸ். ஆபீஸ் பைல்களை ஸ்டோர் செய்து வைத்திட, ஸ்கை ட்ரைவ் என்ற பெயரில், 25 ஜிபி அளவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் இடம் தந்து வருகிறது. அத்துடன், இதே போன்ற சேவையை Box, Amazon Cloud Drive மற்றும் Apple’s iCloud ஆகியவை வழங்கி வருகின்றன. ஆனால் இவை 2 ஜிபி அளவி லேயே இடம் தருகின்றன. அதிகமாகத் தேவைப்படும் இடத்தைக் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். இந்த வகையில் கூகுள் நிறுவனமும், குறிப்பிட்ட அளவிற்கு மேல், கட்டணம் செலுத்திப் பெறும் வசதியையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோரேஜ் இடம் அளிக்கும் வசதியை அளிப்பதில் கூகுள் தற்போதுதான் வந்துள்ளது. ஏற்கனவே அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் அளித்து வருகின் றன. கூகுள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் அடிப் படையில் மியூசிக் பைல்களுக்கு இடம் அளித்து வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர் அதிக பட்சம் 20 ஆயிரம் பாடல் பைல்களை இதில் பதிந்து வைத்து, எந்த இடத்திலிருந்தும், எந்த சாதனம் வழியாகவும் இவற்றைப் பெறும் வசதியைத் தந்து வருகிறது. 
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment