Blogger templates


phonecurry இணையதளங்கள்.

புதிதாக செல்போன் வாங்கச்சென்றால் எந்த மாதிரியை செல்போன் வாங்குவது என்ற குழப்பம் நமக்கு வருவது சகஜம் .அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன. எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம்.
இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு முன் இண்டெர்நெட்டில் பல்வேறு போன்களை பார்த்து அவற்றின் விலை மற்றும் அம்சங்களை அலசிப்பார்த்து கொள்ளலாம். இதைவிட‌ சுல‌ப‌மான‌ வ‌ழி ஒன்று இருக்கிற‌து.அது நேராக‌ போன்க‌ரி இனைய த‌ள‌த்திற்கு செல்வ‌து தான்.இந்த‌ த‌ள‌ம் உங்களுக்கு ஏற்ற‌ புதிய‌ போன் எது என்று தேர்வு செய்து கொள்ள‌ வ‌ழி காட்டுகிற‌து. இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்த‌தும் உங்க‌ள்: ப‌ட்ஜெட்டை குறிப்பிட்டு விட்டு,போனில் நீங்க‌ள் எதிர்பார்க்கும் அம்ச‌ங்க‌ள் எவை என்ப‌தை குறிப்பிட‌ வேண்டும்.எல்லாவ‌ற்றுக்கும் த‌னித்த‌னி க‌ட்ட‌ங்க‌ள் இருப்ப‌தால் அவ‌ற்றில் இருந்து தேர்வு செய்தாலே போதும்.

                             
 
ட‌ச் ஸ்கிரீன் தேவையா,மீயூசிக் பிலேய‌ர் தேவையா,கீபோர்டு எப்ப‌டி இருக்க‌ வெண்டும் என்று குறிப்பிட்ட‌ பின் கிளிக் செய்தால் பொருத்த‌மான‌ போனை அடையாள‌ம் காட்டும். அத‌ன் பிற‌கு அந்த‌ குறிப்பிட்ட‌ ர‌க‌ம் ப‌ற்றி ப‌டித்துவிட்டு அதே போன்ற‌ ம‌ற்ற‌ போன்க‌ளோடு அத‌ன் விலையையும் ஒப்பிட்டு பார்த்து எது திருப்ப்தி அளிக்கிற‌தோ அத‌னை தேர்வு செய்ய‌லாம்.
மிக‌வும் எளிமையான‌ நான்கே ப‌டிக‌ளில் பொருத்த‌மான‌ போனை தேர்வு செய்து விட‌லாம் என்று போன்க‌ரி உறுதி அளிக்கிற‌து.

                                     
 
இணையதள முகவரி சுட்டி 
GSM போன்க‌ள் ம‌ட்டுமே இந்த‌ த‌ள‌த்தில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. CDMA போன்க‌ள் இல்லை. அதே போல‌ இர‌ண்டு ஆண்டுக்கு மேல் ப‌ழ‌மையான‌ போன்க‌ள் இல்லை.அந்த‌ போன்க‌ள் காலாவ‌தியாகி போய் க‌டைக‌ளில் இல்லாத‌ நிலையும் இருக்க‌லாம் என்ப‌தால் இப்ப‌டியாம். நேராக‌ குறிப்பிட்ட‌ ர‌க‌ போன் பெய‌ரை குறிப்பிட்டு அத‌னை ப‌ற்றியும் தெரிந்து கொள்ளூ வ‌ச‌தியும் உள்ள‌து.போன்க‌ளின் ப‌ட்டிய‌லை கிளீக் செய்து அவை பற்றியும் ஆர‌ய்ந்து பார்க்க‌லாம்.
இந்திய‌ நுக‌ர்வோருக்கு செல்போன் வாங்க‌ வ‌ழி காட்டும் நோக்கில் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ இந்த‌ த‌ள‌ம் த‌ன்னைப்ப‌ற்றி குறிபிடுகிற‌து.
ம‌ற்ற‌ போன் த‌ள‌ங்க‌ளை விட‌ எளிமையான‌து.சிற‌ந்த‌தும் கூட‌. நான் ட்ரை பண்ணி பார்த்தேன் நல்லாருக்கு .! நீங்களும் பார்த்துட்டு சொல்லுங்க
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment