Blogger templates

பதிவு எழுதினால் மட்டும் போதுமா?

பிளாக்கும் தொடங்கியாச்சு, பதிவும் எழுதியாச்சு. அடுத்து என்ன செய்ய வேண்டும்? நாம் பதிவுகள் எழுதுவதே அதனை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதனால் தான். அதனால் அதனை அனைவரிடமும் போய் சேர்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். எப்படி என்று இப்பகுதியில் பார்ப்போம்.

இது ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடரின் 24-ஆம் பகுதி ஆகும். 

நண்பர்களும், உறவினர்களும்:

நமக்கு அதிக ஆதரவு கொடுப்பவர்கள் நண்பர்களும், உறவினர்களும் தான். அதனால் முதலில் அவர்களிடம் உங்கள் பிளாக்கை பற்றி சொல்லுங்கள். அதற்காக அனைவரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் எதைப்பற்றி எழுதுகிறீர்களோ அதில் ஆர்வம் உள்ளவர்களிடமும், இணைய வசதி உள்ளவர்களிடமும் மட்டும் சொன்னால் போதுமானது. பிறகு அவர்கள் உங்கள் ப்ளாக்கைப் பற்றி பின்னூட்டங்களைக் (Feedback) கொடுப்பார்கள்.

திரட்டிகள்:

நம்முடைய பதிவுகள் அதிகமான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உதுவுவது திரட்டிகள் ஆகும். ஒவ்வொரு பதிவும் எழுதியதும் மறக்காமல் உங்கள் பதிவுகளை திரட்டி தளங்களில் இணைத்திடுங்கள். திரட்டிகள் நமது தளங்களில் இணைப்பதற்காக ஓட்டுப் பட்டைகள் கொடுக்கும். அதற்காக இருக்கும் எல்லா திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளையும் இணைத்துவிடாதீர்கள். பிறகு உங்கள் தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். குறிப்பிட்ட சில ஓட்டுப்பட்டைகளை மட்டும் வைத்தால் போதும்.

திரட்டிகளைப் பற்றிய பதிவுகள்:

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 1 (பதிவை  பிரபலமாக்குவது பற்றி முழுமையாக அறியவும் இந்த தொடர் உதவும்.)
  
பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு

சமூக  இணையதளங்கள்:

இணையத்தில் உலாவும் பெரும்பாலானவர்கள் அதிகம் இருப்பது பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக இணையதளங்களில் தான். அதனால் அது போன்ற தளங்களில் நமது பதிவுகளைப் பகிர்வதும் சிறந்த வழியாகும். சமூக இணைய தளங்களின் பகிர்தல் பட்டைகளை (Share Buttons) மறக்காமல் இணைத்திடுங்கள். அதன் மூலம் நமது வாசகர்களும் அவர்கள் நண்பர்களிடம் பகிர்வார்கள்.

செய்யக் கூடாத மின்னஞ்சல் முறை:

இணையம் மூலம் நமக்கு நண்பர்களானவர்கள் பலரது மின்னஞ்சல் முகவரிகள் நமக்கு தெரிந்திருக்கலாம். அதற்காக நாம் பதிவிடும் போதெல்லாம் நமக்கு தெரிந்தஅனைவருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்புவது செய்யக் கூடாதஒன்றாகும். அப்படி அனுப்புவதனால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படலாம். சில சமயம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை Spam பகுதியில் சேர்த்துவிடலாம். அப்படி செய்தால் நீங்கள் முக்கியமான மின்னஞ்சல் அனுப்பினாலும் அதனை அவர்கள் படிக்க முடியாமல் போகும். விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சல்கள் மூலம் நமது பதிவுகளைப் பெறுவதற்கு தான் "Email Subscription" வசதி உள்ளது. அதனால் அதனை தவிர்ப்பது நலம்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment