ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இதுவரை ப்ளாக் தொடங்கிய பிறகு செய்ய வேண்டியவைகளைப் பற்றித் தான் எழுதி வந்தேன். இணையத்தில் புதிதாக வரும் நண்பர்களுக்கு பயன்படும் வகையில் ப்ளாக் தொடங்குவது பற்றி முடிந்தவரை முழுமையாக எழுதலாம் என எண்ணியுள்ளேன். இது முற்றிலும் புதியவர்களுக்கான பதிவு என்பதால் அதிகம் பேர் அறிந்திருக்கும் தகவல்களாகத் தான் இருக்கும்.
ப்ளாக் என்றால் என்ன?
Weblog என்பதன் சுருக்கமே Blog ஆகும். தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு என்று அழைக்கப்படும். ப்ளாக் என்பது ஒருவகையான இணையத்தளம், அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். செய்திகளை பகிரும் முறையில் இவை இரண்டும் வேறுபடுகின்றன.
- இணையத்தளங்களில் செய்திகள் எப்பொழுதாவது தான் புதுப்பிக்கப்படும். ஆனால் ப்ளாக்கில் செய்திகள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். (உங்கள் ப்ளாக் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அது இணையத்தளம் ஆகிவிடாது!!! )
- ப்ளாக்கின் சிறப்பம்சங்களில் ஒன்று வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதி. (பெரும்பாலான) இணையத்தளங்களில் அந்த வசதி இல்லை. நம் கருத்துக்களை சொல்ல வேண்டுமானால் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த வேண்டும்.
- இணையத்தளம் தொடங்குவதற்கு PHP, MySQL, Python போன்ற கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ப்ளாக் தொடங்குவதற்கு கணினி அடிப்படைகள் தெரிந்தாலே போதும்.
ப்ளாக் பற்றி ப்ளாக்கர் தளம் பின்வருமாறு கூறுகிறது.
A blog is a personal diary. A daily pulpit. A collaborative space. A political soapbox. A breaking-news outlet. A collection of links. Your own private thoughts. Memos to the world.
Your blog is whatever you want it to be. There are millions of them, in all shapes and sizes, and there are no real rules.
In simple terms, a blog is a website, where you write stuff on an ongoing basis. New stuff shows up at the top, so your visitors can read what's new. Then they comment on it or link to it or email you. Or not.ஏன் ப்ளாக் தொடங்க வேண்டும்?
உண்மையை சொன்னால் இதற்கு சரியான வரைமுறைகள் எதுவும் இல்லை. எதற்கு வேண்டுமானாலும் ப்ளாக் தொடங்கலாம். உங்கள் கருத்துக்களையோ, அனுபவங்களையோ, உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றியோ, நீங்கள் ரசித்தவைகளைப் பற்றியோ மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக ப்ளாக் தொடங்கலாம். இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்காகவும் கூட ப்ளாக் தொடங்கலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.
குறிப்பு: பணம் சம்பாதிப்பதற்காக ப்ளாக் தொடங்க நினைத்தால் உங்கள் ப்ளாக்கை ஆங்கிலத்தில் தொடங்குங்கள். ஆங்கிலத் தளங்களைப் பிரபலப்படுத்துவது பற்றியும் இத்தொடரில் எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.
எப்படி தொடங்குவது?
இலவசமாக ப்ளாக் தொடங்குவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருக்கும் இரண்டு, ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ்ஆகியவை. நாம் இத்தொடரில் பார்க்கவிருப்பது ப்ளாக்கர் தளம் பற்றி தான். ஏனெனில் இலவச வேர்ட்பிரஸ் தளத்தைக் கொண்டு நாம் சம்பாதிக்க முடியாது. மேலும் அதில் உருவாக்கப்படும் தளத்தின் வடிவமைப்பில் நமக்கு விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாது. ஆனால் அதற்கென்று சில சிறப்பம்சங்கள் உள்ளது. அது நமக்கு தேவையில்லை.
ப்ளாக்கர்:
ப்ளாக்கர் (Blogger) தளம் கூகிள் நிறுவனத்தின் தளமாகும். உங்களுக்கு ஜிமெயில், யூட்யூப் போன்ற கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் ப்ளாக்கர் தளத்தைப் பயன்படுத்தலாம். அல்லது புதிதாக கூகிள் கணக்கு ஒன்றை தொடங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் தொடங்கும் ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomainஎன்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம். அதை பற்றி பிறகு பார்ப்போம்.
தயாராகிவிட்டீர்களா?
ப்ளாக் தொடங்க தயாராகிவிட்டீர்களா?ஆம் என்றால் உங்கள் ப்ளாக்கிற்கு பெயர் வைக்க பல்வேறு தலைப்புகளை முடிவு செய்து வையுங்கள். ஏனெனில் நீங்கள் நினைக்கும் பெயரை ஏற்கனவே யாராவது வைத்திருக்கக்கூடும். நீங்கள் எதைப்பற்றி எழுதப் போகிறீர்களோ அது தொடர்பான வார்த்தைகளாக அந்த பெயர் இருக்கட்டும்.
இறைவன் நாடினால், அடுத்த பகுதியில் புதிய ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம். அதுவரை காத்திருக்க விருப்பமில்லை என்றால்www.blogger.com என்ற முகவரிக்கு சென்று முயற்சித்துப் பாருங்கள். மிகவும் எளிதாக ப்ளாக் உருவாக்கிவிடலாம்.
கடந்த பகுதியில் ப்ளாக் பற்றிய சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். தற்போது புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்குவோம். அதற்கு முன் நமது ப்ளாக்கின் பெயர் எப்படி இருக்க வேண்டும்? என்று பார்ப்போம்.
ப்ளாக்கிற்கு பெயர் வைப்பது எப்படி?
ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது முடிந்தவரை சிறியதாகவும், நினைவில் நிற்கும்படியும் வையுங்கள். மேலும் நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ? அது தொடர்பான பெயராக இருக்கட்டும். தமிழ் ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது அந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது எழுத்துக்களில் குழப்பம் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு "தினச்செய்தி" என்று பெயர் வைத்தால் அதனை ஆங்கிலத்தில்"thinachcheithi", "dinaseithi", "dhinachcheithi", "thinaseithi" இப்படி பல குழப்பங்கள் வாசகர்களுக்கு வரலாம். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது. பல வாசகர்கள் உங்கள் தளத்தை புக்மார்க் செய்திருக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் புக்மார்க் மூலம் வருவதில்லை. வேறொரு கணினிகளை பயன்படுத்தினால் நேரடியாக உங்கள் தள முகவரியைக் கொடுத்து வருவார்கள். அது போன்ற சமயங்களில் குழப்பம் ஏற்படும்.
உங்கள் ப்ளாக் முகவரியுடன் blogspot என்ற sub-domain-ம் சேர்ந்து வரும் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு பதிலாக .com, .net, .org போன்ற Custom domain-ல் மாறும் எண்ணம் இருந்தால் முதலில் அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று பாருங்கள் (அவ்வாறு பார்க்க http://www.godaddy.com/என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்). ஏனெனில் நீங்கள் ஒரு பெயரில் ப்ளாக்கை நடத்தி வந்தது Custom Domain-கு மாறும் போது வேறொரு பெயரை பயன்படுத்தினால் சில வாசகர்களை இழக்க நேரிடும்.
ஆங்கிலத் தளங்களை தொடங்குவதாக இருந்தால் உங்கள் ப்ளாக் பெயரில் Keywords எனப்படும் குறிச்சொற்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் ப்ளாக் தொழில்நுட்பம் பற்றியது என்றால் ப்ளாக்கின் பெயரில் "tech", "technology", "techno", "web" போன்ற வார்த்தைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்னது சின்ன விஷயம் தான். மேலே சொன்னவைகள் போன்று பெயர் வைக்கவில்லை என்றாலும் உங்கள் ப்ளாக் பிரபலமானால் உங்கள் பெயரும் பிரபலமாகும். "ஆப்பிள்", "கூகிள்", "பேஸ்புக்" போன்றவைகள் முதலில் வந்த போது யாரும் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் பெயர் வைப்பது என்பது சின்ன விஷயம் தான்.
சரி, இனி ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம்.
புதிய ப்ளாக் உருவாக்குவது எப்படி?
1. முதலில் www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.
2. உங்களுக்கு ஜிமெயில் அல்லது வேறொரு கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்நுழையுங்கள். இல்லையென்றால் புதிதாக ஜிமெயில் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
3. பிறகு வரும் பக்கத்தில் Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுத்து, Email Notifications என்ற இடத்தில் விருப்பமிருந்தால் செக் செய்து, Accept of Terms என்ற இடத்தில் (கண்டிப்பாக) செக் செய்து Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.
4. பிறகு வரும் பக்கம் தான் Dashboard எனப்படும். ப்ளாக்கரில் நாம் அனைத்து வேலைகளையும் செய்வது இங்கு தான்.
புதிதாக உள்நுழையும் போது சில டிப்ஸ்களை காட்டும். அவற்றை Close செய்துவிடுங்கள். இந்த தோற்றம் ப்ளாக்கரின் பழைய தோற்றமாகும். மேலும் பல வசதிகளுடன் கூடிய புதிய தோற்றத்தை ப்ளாக்கர் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பயன்படுத்த படத்தில் சுட்டிக் காட்டிருப்பது போன்று Try the updated Blogger Interface என்பதை க்ளிக் செய்யுங்கள்.
5. பிறகு உங்கள் Dashboard தோற்றம் பின்வருமாறு இருக்கும்.
Dashboard பக்கத்தில் உள்ளவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பிறகு பார்க்கலாம்.
6. புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்க New Blog என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அதில்,
Title என்ற இடத்தில் ப்ளாக் பெயரை (தமிழ் ப்ளாக் என்றால் தமிழில்) கொடுங்கள்.
Address என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கிற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்.
கவனிக்க: முகவரியில் என்ன கொடுக்கிறீர்களோ? அதனையே ப்ளாக் பெயராகக் கொடுங்கள். இரண்டும் வேறுவேறாக இருந்தால் அது வாசகர்களை குழப்பும்.
Template என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை (உங்கள் ப்ளாக்கின் தோற்றம்) தேர்வு செய்யுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம். பிறகு Create Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்! உங்களுக்கான புதிய ப்ளாக் உருவாகிவிட்டது. அதனை பார்க்க View Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.[படங்களை பெரிதாகக் காண படத்தின் மேல் சொடுக்கவும்.]
ப்ளாக்கர் Dashboard பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.
அதில் Start Blogging என்பதனை க்ளிக் செய்தால் புதிய பதிவு எழுதுவதற்கான பக்கம் பின்வருமாறு வரும்.
அந்த பக்கத்தில் மேலே உள்ள சிறிய பெட்டியில் பதிவிற்கான தலைப்பு கொடுக்க வேண்டும்.
அதற்கு கீழே உள்ள பெரிய பெட்டியில் நீங்கள் எழுத நினைக்கும் பதிவை எழுத வேண்டும்.
பதிவின் தலைப்புக்கு பக்கத்தில்
என்று நான்கு பட்டன்கள் இருக்கும்.
Publish - நீங்கள் பதிவை எழுதி முடித்தப் பின் அதனை பிரசுரிப்பதற்கு இதனை சொடுக்கவும்.
Save - நீங்கள் பதிவை எழுதி, பிறகு பிரசுரிக்கலாம் என்று நினைத்தாலோ, அல்லது பாதி பதிவை எழுதி மீதியை பிறகு எழுதலாம் என நினைத்தாலோ Save என்பதை சொடுக்கவும். அவ்வாறு சேமித்த பதிவுகள் Drafts எனப்படும்.
கவனிக்க: ப்ளாக்கரில் பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போது தானியங்கியாக நாம் எழுத எழுத சேமித்துக் கொள்ளும்.
Preview - நாம் எழுதும் பதிவை பிரசுரிப்பதற்கு முன்னால் அது பிரசுரித்தப் பின் எப்படி வரும் என்பதை முன்னோட்டம் பார்க்க இதனை சொடுக்கவும். இதன் மூலம் நம் பதிவில் எழுத்துப் பிழைகளோ அல்லது வேறு பிழைகளோ இருந்தால் சரி செய்துக் கொள்ளலாம்.
Close - பதிவெழுதும் பகுதியில் இருந்து வெளியேற இதனை சொடுக்கவும்.
பதிவின் தலைப்புக்கு கீழ் பின்வருமாறு இருக்கும்.
இவைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
- இது Undo/Redo ஆகும். பதிவெழுதும் போது மாற்றம் செய்தால் முந்தைய மாற்றத்திற்கு செல்லவும், பிந்தைய மாற்றத்திற்கு செல்லவும் பயன்படுகிறது.
- இவைகள் எழுத்துக்களை அழகுப்படுத்த உதவுகிறது. நாம் மாற்ற வேண்டிய வார்த்தைகளை தேர்வு செய்து இதனை சொடுக்க வேண்டும்.
- இவைகள் மற்ற இணையப்பக்கங்களுக்கு இணைப்பு (Links) கொடுக்க, படங்கள், வீடியோக்கள் இணைக்க, முகப்பு பக்கத்தில் சிலவற்றை மட்டும் தெரியவைக்க (Jump Break) பயன்படுகிறது.பதிவில் படத்தை இணைத்தப்பின் அதன் அளவை மாற்ற படத்தின் மேல் க்ளிக் செய்யுங்கள்.
அவ்வாறு க்ளிக் செய்தபின் அதில் Small, medium, Large, X-Large, Original Size இவற்றில் ஒன்றை தேர்வு செய்து அளவை மாற்றலாம். மேலும் Left, Center, Right இவற்றில் ஒன்றை தேர்வு செய்து இடது, நடு, வலது புறத்தில் படத்தை தெரிய வைக்கலாம்.
பதிவில் வீடியோக்களை இணைப்பது பற்றி விரிவாகக் காண ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி? என்ற பதிவை பார்க்கவும்.
Jump Break பற்றி அறிய வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி?என்ற பதிவை பார்க்கவும்.
- இவைகள் (இடது, வலம், நடு என்று) எழுத்துக்களை அல்லது படங்களை Align செய்ய, பட்டியலிட, மேற்கோள் காட்ட, எழுத்துக்களில் நாம் செய்த மாற்றங்களை நீக்க, எழுத்துப்பிழைகளை பார்க்க பயன்படுகின்றன.
- இவை தமிழில் உள்பட பல மொழிகளில் தட்டச்சு செய்யவும் (Amma என்று டைப் செய்தால் அம்மா என்று வரும்), பதிவை வலதுப் பக்கத்திலிருந்து இடது பக்கமாகவோ, இடத்துப் பக்கத்திலிருந்து வலது பக்கமாகவோ தெரியவைக்கவும் பயன்படுகிறது.இனி அதே பக்கத்தில் வலதுபுறம் உள்ள Post Settings பற்றி பார்ப்போம்.
Schedule - நீங்கள் எழுதும் பதிவை எப்பொழுது பிரசுரிக்க வேண்டும் என்பதை இங்கு தேர்வு செய்யலாம். Default-ஆக இது Automatic என்று இருக்கும். நீங்கள் எப்பொழுது Publish பட்டனை க்ளிக் செய்கிறீர்களோ, அப்பொழுது பிரசுரமாகும். இல்லையென்றால் Set Date and Time என்பதை க்ளிக் செய்து எப்பொழுது பிரசுரமாக வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு பதிவை மறுநாள் காலை பிரசுரமாக தேர்வு செய்தீர்கள் என்றால் மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இல்லையென்றாலும் தானாக பிரசுரமாகும். மேலும் ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகளை இன்று பதிந்தது போலவும் மாற்றலாம்.
Location - இது உங்கள் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக பயன்படுகிறது. இதனை தவிர்ப்பது நலம்.
Reader Comments - நீங்கள் எழுதும் அந்த பதிவில் வாசகர்கள் பின்னூட்டம் (Comment) இடலாமா? வேண்டாமா? என்பதை தேர்வு செய்யலாம். (இது மற்ற பதிவுகளை பாதிக்காது. எழுதும் அந்த பதிவிற்கு மட்டுமானது)
Compose Mode - Compose Mode-ல் வைத்து பதிவு எழுதும் போது HTML Code இணைத்தால், அது Code-ஆகவே தெரிவதற்கு "Show HTML literally" என்பதனையும், Code-ற்கு பதிலாக அதன் வெளியீடு தெரிவதற்கு "Interpret typed HTML" என்பதனையும் தேர்வு செய்யவும்.
Line Breaks - இது தேவையில்லை விட்டுவிடுங்கள். ( இரண்டும் முயற்சித்தேன். ஒன்றாகத் தான் உள்ளது)
பதிவு எழுதியப் பின் Publish என்பதை கொடுக்க வேண்டியது தான். கொடுத்தபின் அனைத்து பதிவுகளும் இருக்கும் Posts பக்கத்திற்கு வரும். அங்கு மேலே உள்ள View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கை பார்க்கலாம்.
என் மாதிரி தளத்தின் முதல் பதிவு:
உலவியின் மேலே முகவரி பெட்டியில் http://tamilnutpangal.blogspot.com/ என்று இருக்கும். அது உங்கள் ப்ளாக் முகவரி. பதிவின் தலைப்பை க்ளிக் செய்து பிறகு முகவரியை பார்த்தால் http://tamilnutpangal.blogspot.com/2011/11/blog-post.html என்று இருக்கும். இது அந்த குறிப்பிட்ட பதிவின் முகவரி. ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி முகவரிகள் இருக்கும்.
(ப்ளாக்கர்) ப்ரோஃபைல் என்பது உங்களைப் பற்றிய சுயவிவரப் பக்கமாகும். இதன் மூலம் வாசகர்கள் உங்களைப் பற்றி அறிந்துக் கொள்வார்கள். இதனை திருத்தம் செய்வது பற்றி பார்ப்போம்.
நீங்கள் ப்ளாக்கர் டாஷ்போர்ட் சென்றால் அங்கு மேலே வலதுபுறம் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருக்கும். அதனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
அதில் Blogger Profile என்பதை க்ளிக் செய்தால் பின்வரும் பக்கம் வரும்.
அதில் User Stats என்ற இடத்தில் நீங்கள் எப்பொழுது பிளாக்கரில் இணைந்தீர்கள்? என்பதையும், உங்கள் ப்ரோஃபைல் பக்கத்தை எத்தனை நபர்கள் பார்த்தார்கள்? என்பதையும் என்பதையும் காட்டும். ப்ரொஃபைலில் திருத்தம் செய்ய Edit Profileஎன்பதை சொடுக்கவும்.
இதில் சிலவற்றை மற்றும் இங்கு பார்ப்போம். மற்றவைகளை விருப்பமிருந்தால் பூர்த்தி செய்யலாம்.
Share My Profile - உங்கள் சுயவிவரப் பக்கம் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும்.
Show My Email Address- உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும். ( இதனை தெரியாமல் வைப்பதே நல்லதாகும். ஏனெனில் இதனால் ஸ்பாம் மெயில்கள் வர வாய்ப்புள்ளது. இது பற்றி மேலும் அறியஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவை பார்க்கவும்)
Show My Blogs - நீங்கள் உருவாக்கியத் தளங்கள் தெரிய வேண்டுமா? என்பதை Select blogs to display என்பதை க்ளிக் செய்து தேர்வு செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் இருந்தால் குறிப்பிட்டவற்றை மட்டும் தெரிய வைக்கலாம்.
Show Sites I Follow - நீங்கள் பின்தொடரும் தளங்கள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும். [மற்ற தளங்களை பின்தொடர்வது பற்றி இறைவன் நாடினால் இத்தொடரில் பிறகு பார்ப்போம்)
Photograph - உங்கள் ப்ரோஃபைலிற்கான புகைப்படம் இணைக்கலாம்.
Home Page URL - இங்கு உங்கள் தளத்தின் முகவரியை கொடுக்கவும்.
மேலும் பல இடங்களில் உங்களுக்கு விருப்பமானதை பூர்த்தி செய்யலாம் அல்லது வெறுமனே விட்டுவிடலாம். பூர்த்தி செய்த பின் Save profile என்பதை க்ளிக் செய்யவும்.
பிறகு View Updated Profile என்பதை க்ளிக் செய்தால் உங்கள் ப்ரொஃபைல் பின்வருமாறு இருக்கும்.
மீண்டும் ப்ளாக்கர் டாஷ்போர்ட் பக்கத்திற்கு செல்ல ப்ளாக்கர் லோகோவை க்ளிக் செய்து செல்லலாம்.
ப்ரொபைல் பக்கம் எங்கு தெரியும்?
நீங்கள் மற்ற தளங்களில் பின்னூட்டம் இட்டால் உங்கள் ப்ரொஃபைல் பக்கத்திற்கான இணைப்பு வரும். மேலும் உங்கள் ப்ளாக்கில் ப்ரொஃபைல் Gadget வைத்தால்உங்கள் ப்ளாக்கில் தெரியும். ( Gadget என்பதை பற்றியும் இறைவன் நாடினால் பிறகு பகிர்கிறேன்.)
கவனிக்க: சமீபத்தில் ப்ளாக்கர் சுயவிவரப்பக்கத்திற்கு பதிலாக கூகிள் ப்ளஸ்சுயவிவரப் பக்கத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது ப்ளாக்கர் தளம். அதை பற்றி கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர் என்ற பதிவில் பார்க்கவும். ப்ளாக் ஒன்றை நாம் உருவாக்கியப் பின் மற்றவர்களிடம் அதனை அறிமுகப்படுத்துவதற்கு முன் ப்ளாக்கர் பற்றி நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். ப்ளாக்கரில் உள்ள அமைவுகளைப் பற்றி இனி பார்ப்போம்.
இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.
ப்ளாக்கர் முகப்பு பக்கத்தில் (டாஷ்போர்டில்) நாம் உருவாக்கிய ப்ளாக்கின் அமைவுகள் பின்வருமாறு இருக்கும்.
ப்ளாக்கின் பெயருக்கு கீழே,
நமது ப்ளாக்கின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? (Pageviews)
எத்தனை பதிவுகள் நமது ப்ளாக்கில் உள்ளது? (பிரசுரிக்கப்படாமல் Drafts பகுதியில் உள்ள பதிவுகளையும் சேர்த்து காட்டும்.)
எத்தனை நபர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்கிறார்கள்? என்பதைக் காட்டும். இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
அதே பகுதியில் வலதுபுறம் மூன்று பட்டன்கள் இருக்கும்.
- புதிய பதிவு எழுதுவதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள்.
- நமது ப்ளாக்கை பார்க்க இதனை க்ளிக் செய்யுங்கள்.
-இந்த பட்டனில் இடது புறம் க்ளிக் செய்தால் அனைத்து பதிவுகளும் இருக்கும் All Posts பகுதிக்கு செல்லலாம். வலது புறம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்.இதை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
Overview:
Overview என்பதை க்ளிக் செய்தால் நமது ப்ளாக் பற்றிய விவரங்களை மேலோட்டமாக காட்டும்.
Pageviews:
நமது ப்ளாக்கின் பக்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்பதை சிறிய விளக்கப்படமாகக் காட்டும். அதற்கு கீழே அதிகமான வாசகர்களை நமது தளத்திற்கு பரிந்துரை செய்த முதல் மூன்று தளங்களைக் காட்டும்.
Updates:
நம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள், பிரசுரித்த பின்னூட்டங்கள், இன்று நமது ப்ளாக் பக்கங்கள் பார்க்கப்பட்டவைகள், மொத்தப் பதிவுகள், நமது ப்ளாக்கை பின்தொடற்பவர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளை காட்டும்.
News from Blogger:
ப்ளாக்கரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதிகள் பற்றியும், புதிய செய்திகளைப் பற்றியும் http://buzz.blogger.com/ என்ற ப்ளாக்கில் ப்ளாக்கர் தளம் பதிவிட்டு வருகிறது. அதில் பதியப்பட்ட சமீபத்திய பதிவுகளை இங்கு காட்டும்.
Recent Blogs of Note:
சிறந்த ஆங்கில ப்ளாக்கர் தளங்களை தினமும் http://blogsofnote.blogspot.com/ என்ற தளத்தில் ப்ளாக்கர் தளம் பகிர்கிறது. அவற்றை இங்கு காட்டும்.
Blogger Guide:
பதிவர்களுக்கு பயன்படும் வகையில் சில உதவிக் குறிப்புகளை இங்கு காட்டும். அந்த இணைப்புகளை சொடுக்கி தெரிந்துக் கொள்ளலாம். ப்ளாக் தொடங்குவது பற்றிய இத்தொடரில் மேலும் சிலவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.
இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.
ப்ளாக்கர் டாஷ்போர்டில் More options பட்டனில் Overview-க்கு அடுத்ததாக Posts என்று இருக்கும். அதனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
அதில் இடது புறம் All, Drafts, Published என்று இருக்கும்.
All - இதனை க்ளிக் செய்தால் நீங்கள் எழுதிய, பிரசுரித்த அனைத்து பதிவுகளையும் காட்டும்.
Draft - இதனை க்ளிக் செய்தால் நீங்கள் பாதி எழுதி பிரசுரிக்காத பதிவுகளை மட்டும் காட்டும்.
Published - இதனை க்ளிக் செய்தால் நீங்கள் பிரசுரித்த பதிவுகளை மட்டும் காட்டும்.
---------------------------------------------------------------------------------------------------------
உங்கள் பதிவின் பெயருக்கு பக்கத்தில் நீங்கள் அந்த பதிவிற்கு இட்ட குறிச்சொற்களை (Labels) காட்டும். அதற்கு கீழே பின்வரும் தேர்வுகள் இருக்கும்.
Edit - இதனை க்ளிக் செய்து பதிவில் திருத்தம் செய்யலாம். (திருத்தம் செய்யும் போது Publish என்ற பட்டனுக்கு பதிலாக Update என்ற பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.)
View - அந்த பதிவை ப்ளாக்கில் பார்ப்பதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள்.
Delete - பதிவை நீக்குவதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள். நீக்கப்பட்ட பதிவை திரும்ப பெற முடியாது என்பதை நினைவில் வைக்கவும்.
கவனிக்க: பிரசுரிக்கப்பட்ட பதிவை ப்ளாக்கில் இருந்து நீக்க வேண்டும், ஆனால் அதனை டாஷ்போர்டில் வைத்திருக்க வேண்டும் என நினைத்தால், Editஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு Revert to draft என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பதிவு ப்ளாக்கிளிருந்து நீக்கப்படும். மேலும் அது Draft பகுதியில் இருக்கும். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அதனை பிரசுரிக்கலாம்.
இதனை Posts பகுதியில் இருந்தும் செய்யலாம்.
Posts பகுதியில் மாற்றம் செய்ய வேண்டிய பதிவுகளை தேர்வு செய்து, அதன் மேலே Revert to Draft என்ற பட்டனை க்ளிக் செய்தால், அந்த பதிவுகள் Draft பகுதிக்கு சென்றுவிடும்.
Labels:
ஒன்றுக்கும் அதிகமான பதிவுகளில் புதிதாக குறிச்சொற்களை (Labels) சேர்க்கவும், ஏற்கனவே உள்ள குறிச்சொற்களை நீக்கவும் செய்யலாம்.
அப்படி செய்வதற்கு எந்த பதிவுகளில் மாற்றம் செய்ய வேண்டுமோ, அவற்றை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.
தேர்வு செய்த பின்
என்றபட்டனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.புதிதாக குறிச்சொற்களை சேர்க்க New label என்பதை க்ளிக் செய்து புதிய குறிச்சொற்களை கொடுக்கவும்.
ஏற்கனவே ஒரு பதிவில் இருக்கும் குறிச்சொற்களை தேர்வு செய்துள்ள அனைத்து பதிவுகளுக்கும் கொடுக்க Apply Label என்பதற்கு கீழே உள்ளவற்றில் க்ளிக் செய்யவும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் உள்ள குறிச்சொற்களை நீக்க, Remove Labelஎன்பதற்கு கீழே உள்ளவற்றில் நீக்க வேண்டிய குறிச்சொற்களை க்ளிக் செய்யவும்.


























உங்களது ப்ளாக்கில் சப்ஸ்கிரைப் பட்டன் இல்லையே.....
ReplyDelete