Blogger templates

ப்ளாக் தொடங்கியாச்சு, அடுத்து?

இது ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடரின் 4-ஆம் பகுதி ஆகும். அனைத்து பகுதிகளிலும் ஒரே தலைப்பாக வைத்தால் வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்ற நண்பர்களின் ஆலோசனையை ஏற்று தலைப்பு அந்தந்த பகுதிகளில் உள்ளவற்றுக்கு ஏற்றவாறு கொடுக்கிறேன். இனி பதிவிற்கு செல்வோம்.

ப்ளாக் தொடங்கியதும் அறிமுக பதிவு ஒன்றை பதிவிடச் சொன்னேன் அல்லவா? அவ்வாறு பதிவிட்டப்பின் நம்முடைய ப்ளாக்கை அழகுப்படுத்தவும், தேடுபொறிகளில் முன்னிலையில் வரவும் சில காரியங்கள் செய்ய வேண்டும். அவற்றைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளதால் அதற்கான சுட்டி மட்டும் இங்கே தொகுக்கிறேன்.


1. ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி?

டெம்ப்ளேட்  தேர்ந்தெடுக்கும் போது சிம்பிளாகவும், எளிதில் Load ஆகும்படியுமாக இருக்கட்டும்.

2. ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா?

உங்கள் ப்ளாக்கை தேடுபொறிகளில் முன்னிலைக்கு கொண்டு வருவதற்கான (Search Engine Optimization) முதல் படி. இதனை அவசியம் செய்யுங்கள்.

3. வாசகர்களை அதிகரிக்க Meta Tags

இதுவும்  தேடுபொறிகளில் முன்னிலைக்கு கொண்டு வருவதற்கான வழியாகும்.

4. பிளாக்கரில் Related Posts Widget வைப்பது எப்படி?

ஒவ்வொரு  பதிவுகளுக்கும் கீழே அது தொடர்புடைய மற்ற பதிவுகளை காட்டுவதற்கு இந்த Widget பயன்படுகிறது. இதனை வைப்பது மூலம் Pageviews அதிகரிக்கலாம்.

5. பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)

நமது  ப்ளாக்கில் பக்க எண்களை கொடுப்பதற்கான செயல்முறைகள்.

மேலும் செய்ய வேண்டியவைகளைப் பற்றிய பதிவுகள்

6. ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி?

7. ப்ளாக்கில் Read More Button-ஐ வைக்க..

8.  எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..

இனி நம்முடைய ப்ளாக்கை மற்றவர்களிடம் பிரபலப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment