Blogger templates

உங்கள் பதிவுகள் காப்பி அடிக்கப்படுகிறதா..?

தளத்தில் என்ன சிறப்பு என்கறீர்களா? இருக்கிறது.. உங்கள் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், பதிவுகள், போன்ற உங்கள் சொந்த ஆக்கங்கள் பிறர் அவர்களின் தளத்தில் பதிவிடும் போது உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுக்காமலேயே விட்டுவிடுவார்கள் இல்லையா? அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவுகளை காப்பி செய்யும்போது இணைப்பு கொடுத்துவிட்டால்...

ஆம்.. அதைத்தான் செய்கிறது இந்த தளம்..

இத்தளத்தில் சென்று உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் தள முகவரி கேட்கும். இறுதியாக submit என்பதை அழுத்தவும்.இப்போது நெக்ஸ்ட் என்பதை அழுத்துங்கள். அதனைத் தொடர்ந்து வரும் நிரல்வரிகளை
காப்பி செய்துகொள்ளுங்கள். அந்த தளத்திலேயே காப்பி செய்த நிரல்வரிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பையும் கொடுக்கும். அதன்படி அந்த நிரல்வரிகளை உங்கள் தளத்தில் இணைத்துவிடுங்கள். 

create automatic link when copy content in your blog or site

அதாவது நிரல் வரிகளை உங்கள் பிளாக்கர் அல்லது சொந்த தளத்தில் வரிக்கு முன் பேஸ்ட் செய்துவிடுங்கள். இறுதியாக Save Template என்பதை சொடுக்கி மாற்றத்தை சேமித்துக்கொள்ளவும்.

பிறகு நெக்ஸ்ட் என்பதை அழுத்தி test script என்ற பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள் தளத்தில் சேர்க்கப்பட்ட ஸ்கிரிப் பரிசோதிக்கப்படும். நீங்கள் சரியாக நிரல்வரிகளை சேர்த்திருந்தால் இறுதியில் Your script has been successfully installed!என்று வரும். பிறகென்ன... இனி உங்கள் தளத்தில் யார் காப்பி செய்து அவர்களின் தளத்தில் போட்டாலும் உங்கள் பதிவிற்கான இணைப்பும் அதில் சேர்ந்தே இருக்கும்.

இப்போது உங்கள் தளத்தில் யாராவது உங்கள் கட்டுரைகளையோ,பதிவுகளையோ காப்பி செய்து பயன்படுத்தும்போது அவற்றுடன் உங்கள் தளத்திற்கான இணைப்பும் இணைந்தே காப்பி ஆகும். இதனால் அவர்கள் உங்கள் தளத்திற்கு இணைப்புக்கொடுக்காவிட்டாலும், இணைப்பு தானாகவே பதிவோடு இணைந்துவிடும்.

இது மட்டுமல்ல.. தளத்தில் SEO Overview Report, Keyword Report , Social Sharing Report போன்றவற்றை நமக்கு அறிவிக்கிறது. இதை நம் வசதிக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

இது ஒரு நல்ல வழிமுறைதானே...!!!

தளத்திற்குச் செல்ல இணைப்புச் சுட்டி: https://id.tynt.com/account/sign_up

மற்றொரு வழி உங்கள் தளத்தின் பதிவுகளை காப்பிரைட் செய்து வைத்துக்கொள்வது.. அதைப்பற்றி அடுத்து வரும் பதிவொன்றில் பார்ப்போம். நன்றி நண்பர்களே..!!!

Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment