Blogger templates

Youtube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி? -


கடந்த இரண்டு VLC பற்றிய பதிவுகளில் பல அரிய பயனுள்ள செயல்களை எப்படி VLC மூலம் செய்வது என்று சொல்லி இருந்தேன். இன்றைய பதிவு நிறைய பேருக்கு புதியது. ஆம் இன்றைய பதிவில் Youtube வீடியோ ஒன்றை எப்படி VLC மூலம் டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.




1. முதலில் Youtube -இல் எந்த வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ முகவரியை காபி செய்து கொள்ளவும். 

2. இப்போது VLC Player - ஐ ஓபன் செய்து Media --> Open Network Stream என்பதை தெரிவு செய்யவும். 

3. கீழே உள்ளது போல, அதில் வீடியோ முகவரியை கொடுத்து Play கொடுக்கவும். 


4. இப்போது வீடியோவின் Thumbnail இமேஜ் வரும். உடனே Play பட்டனை கிளிக் செய்யவும். இப்போது வீடியோ ஸ்ட்ரீம் ஆகி play ஆக ஆரம்பிக்கும். 


இப்போது உங்கள் வீடியோவை இரண்டு வழிகளில் தரவிறக்கம் செய்யலாம். ஒன்று Network Stream பகுதியில் Play கொடுப்பதற்கு பதிலாக convert என்று கொடுப்பதன் மூலம். இது எல்லா வீடியோவுக்கும் வேலை செய்யாது என்பதால் இது உதவவில்லை என்றால் அடுத்த முயற்சி. 

இப்போது உங்கள் வீடியோ play ஆகிக் கொண்டிருக்க வேண்டும். அதில் Tools >> Media Information என்பதை தெரிவு செய்யவும். அதில் கீழே Location என்ற ஒன்று இருக்கும். அதில் உள்ள முகவரி மீது ரைட் கிளிக் செய்து Select All கொடுத்து மீண்டும் ரைட் கிளிக் செய்து Copy கொடுக்கவும். 




இதை Firefox உலவியின் Address Bar-இல் கொடுக்கவும். அது இதனை Play செய்ய ஆரம்பிக்கும். அதில் ரைட் கிளிக் செய்து Save Video As என்பதை கிளிக் செய்து Save செய்து விடலாம். இது "WebM" என்ற Format-இல் Save ஆகும். இது எல்லா பிளேயர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு Format தான். 



சில வீடியோக்களை இதன் மூலம் டவுன்லோட் செய்ய இயலாது. அவை பெரும்பாலும் RTMP என்ற வகையறாவாக இருக்கும்.

படத்தை ஒரிஜினல் குவாலிட்டியில் தரவிறக்கம் செய்ய இது தான் சரியான வழி. 

அதே போல மேலும் பல தளங்களில் இருந்தும் வீடியோக்களை VLC Player-இல் பார்க்கலாம், டவுன்லோட் செய்யலாம்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment