Blogger templates

PDF to WORD converter - ஓர் இலவச மென்பொருள்..!!


வணக்கம் எனது இனிய வாசக நெஞ்சங்களே.. இன்றைய பதிவில் ஓர் எளிமையான பயனுள்ள மென்பொருளைப் பார்க்கபோகிறோம். 
இன்று PDF கன்வர்ட்டர்கள் நிறைய வந்துவிட்டன. இதில் நமக்கு வேண்டிய கோப்புகளின் வடிவத்தில் மாற்றம் செய்து மாற்றிக்கொள்ளலாம். அதாவது பி.டி.எப் கோப்புகளாக உள்ளதை வேறு பார்மட்டிற்கு மாற்றம் செய்வதற்கு இந்த மென்பொருள்கள் நமக்கு உதவுகின்றன.

அந்த வகையில் இந்த புதிய மென்பொருளானது ஒரு சிறப்புத் தகுதியுடன் வெளிவந்திருக்கிறது.   இந்த மென்பொருள் பி.டி.எப். கோப்புகளை வேர்ட் டாகுமென்ட்களாக மாற்றித் தரக்கூடியது. Doc, RTF, மற்றும் Docx ஆகியவடிவங்களில் இம்மென்பொருள் துணையுடன் மாற்றிக்கொள்ளலாம்.



நேரடியாக இணையத்தின் வழியும் pdf லிருந்து word க்கு மாற்றம் செய்யவும் வழியமைத்துக் கொடுத்திருக்கிறது இத்தளம்.

தேவைப்படுவோர் இந்த மென்பொருளை தரவிறக்கியும் பயன்படுத்தலாம்.

நேரடியாக ஆன்லைன் மூலம் உங்கள் பி.டி.எப் கோப்பை வேர்ட் பைலாக மாற்றம் செய்யசுட்டி

கணினியில் நிறுவு பயன்படுத்த -  தரவிறக்க சுட்டி
    தளத்தில் இம்மென்பொருளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஆங்கில வரிகள்.

    Exclusive features for the desktop
    1. Batch convert up to 200 PDF files at one go.
    2. Convert a 100-page PDF file within 1 minute.
    3. Select to convert PDF pages or page ranges.

    குறிப்பு: இம்மென்பொருளானது தமிழில் உள்ள பி.டி.எப் கோப்புகளை முழுமையான வடிவில் மாற்றிக் கொடுக்காது. ஆங்கில எழுத்துகளில் உள்ள பி.டி.எப். கோப்புகளை மட்டுமே மாற்றித்தரக்கூடியது.

    தொடர்ந்து எம்முடனான தொடர்பில் இருங்கள்.. பதிவில் ஏதேனும் சந்தேகமோ, அல்லது பிழைகளோ இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும். பதிவைப் பற்றிய தங்களின் கருத்துகளையும் மறக்காமல் எழுதுங்கள். பல புதிய பயனுள்ள பதிவுகளின் வழி சந்திப்போம். நன்றி நண்பர்களே..!!
    Share on Google Plus

    About new news in france

    This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

    0 comments:

    Post a Comment