Blogger templates

G-Mail -லில் Schedule அமைத்து மெயில் அனுப்ப..

இந்த ஷெட்யூல் அமைப்பு பிளாக்கரில் கூட இருக்குங்க.. நீங்க பார்த்திருக்கலாம்.. பதிவுகளை தட்டச்சு செய்துவிட்டு , குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியிடுமாறு டைமிங்கை மாற்றி அமைக்க முடியும்.

அதாவது முன்கூட்டியே மின்னஞ்சலை தட்டச்சு செய்துவிட்டு குறிப்பிட்ட நாளில் , அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு தானாக மின்னஞ்சல் செல்லுமாறு நேரத்தை நிர்ணயிக்கலாம்.

 அலவல் காரணமாக அடுத்த நாள் அலுவலத்திற்கு விடுப்பு எடுக்க நேரிடும்போது, தங்களாலேயே அனுப்பபட வேண்டிய அலுவலகம் சார்ந்த மின்னஞ்சலை முதல்நாளே தட்டச்சிட்டு அடுத்த நாளில் சென்றடையுமாறு செட் செய்துவிட்டு வந்துவிடலாம்.
பிறகு கவலையில்லாமல் அடுத்தநாள் நீங்கள் உங்கள் வேலைகளை செய்துகொண்டிருக்கலாம்..

 நம் செல்போனில் அலாரம் செட் செய்தால் அந்த டைமிற்கு அடிக்கிறதோ அதுமாதிரி நீங்கள் Date, time செட் செய்த மின்னஞ்சலும் அதே தேதி, கிழமை, நாளில் சென்றுவிடும்.

குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல் சென்று உரியவருக்கு சேர்ந்துவிடும்.


இந்த வசதியைப் பெற முதலில் நீங்கள் RIGHT INBOX என்ற தளத்திற்கு செல்லுங்கள்.

தளத்தில் Install now என்பதை கிளிக் செய்து , அந்த நீட்சியை டவுன்லோட் செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.


இதை எப்படி ஆக்டிவேட் செய்வது எனப் பார்ப்போம்.

இம்மென்பொருளை நிறுவியதும் உங்கள் ஜிமெயிலைத் திறந்துகொள்ளுங்கள். அங்கு வழக்கம்போல் மின்னஞ்சல் அனுப்ப compose கிளிக் செய்யவும்.

அங்கு send now என்ற பட்டனுக்கு அருகில் send later என்ற பட்டன் புதிதாக வந்திருக்கும். அதில் கிளிக் செய்தால் உங்களுக்கான விருப்பங்கள் காட்டப்படும். நீங்கள் உங்களுக்கு தகுந்தவாறு, அதில் நாள், நேரம், கிழமை போன்றவற்றை நிர்ணயித்துவிடுங்கள்..

அவ்வளவுதான். நீங்கள் நிர்ணயித்த நேரத்திற்கு உங்கள் மின்னஞ்சல் போய்சேர வேண்டியவருக்கு பத்திரமாகப் போய்ச் சேர்ந்துவிடும்.

Schedule In gmail


இந்த மின்னஞ்சல் நேரத்தை நிர்ணயிப்பது எப்படி என்பதை கீழ்காணும் வீடியோவின் மூலம் காணலாம்.





Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment