Blogger templates

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ

உங்கள் கணினி சிலவேளைகளில் செயலிழந்து இயக்கத்தை நிறுத்திவிடும். மீண்டும் கணினியை சரிசெய்ய அதை Format செய்து பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை ஒவ்வொன்றாக Install செய்துதான் இதுவரையும் பயன்படுத்தியிருப்பீர்கள். இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. உங்கள் கணினியை Fomat செய்தவுடனேயே உங்களுக்கு வேண்டிய softwareகளை உடனடியாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள ஒரு இணையதளம் உள்ளது.


தளத்தின் பெயர்: Ninite

இந்த தளத்தில் உங்கள் வேண்டிய அத்தனை முக்கிய மென்பொருள்களும் இருக்கிறது. உதாரணமாக Web Browsers என்ற தலைப்பில் முக்கிய உலவிகளான google chrome, safari , opera மற்றும் firefox போன்றவைகள் இடம்பெற்றிருக்கின்றன.

messaging என்னும் தலைப்பில் செய்திகளை அனுப்பி பரிமாறக்கொள்ளக்கூடிய Skype, messenger, pidgin, digsby, google talk, thunderbird, trillan, aim, yahoo போன்றவைகளும் உள்ளன.
Media என்னும் தலைப்பில் itunes, songbird, hulu, vlc, kmplayer, aimp, foobar200, Winamp, audacity, k-lite codecs, GOM, Spotify, CCCP, MediaMonkey, Quick Time, போன்ற மீடியா தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன.

Runtimes என்னும் தலைப்பில் ஃளாஸ்(Flash), ஃப்ளாஸ் (IE), JAVA, .NET, Silverlight, Air, Shockwave, போன்ற மென்பொருள்களும் காணப்படுகின்றன.

இதேபோல் Documents, Security, File Sharing, Other, Utilities, Compression, Developer Tools என்னும் தலைப்பின் கீழ் அது தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் வேண்டியதை டிக் செய்து இறுதியில் இருக்கும் Get Installer என்பதைச் சொடுக்கினால் உங்களுக்குத் வேண்டி மென்பொருள்களனைத்தும் தரவிறங்கி உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.

தளத்திற்கான சுட்டி: http://ninite.com/

நன்றி நண்பர்களே..!!

இந்த தளத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய மென்பொருள்களைத் தேர்வு செய்துவிட்டு GET INSTALLER என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உடனே நீங்கள் தேர்வு செய்த மென்பொருளானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். இதனால் நீங்கள் ஒவ்வொரு மென்பொருளாக தேடிப்பிடித்து மீண்டும் கணினியில் INSTALL செய்யும் வேலை மீதியாகும். 
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment