Blogger templates

அதிகபட்ச இணையப் பாதுகாப்பைப் பெற

வணக்கம் நண்பர்களே..! இணையத்தைப் பயன்படுத்தும்போது வைரஸ்கள் கணினியில் இலாவகமா வந்து உட்கார்ந்துகொள்ளும். குறிப்பிட்ட இணைப்பைத்(specific link) திறக்கும்போதோ, அல்லது குறிப்பிட்ட இணையதளத்தைத்(particular websites) திறக்கும்போதே, அல்லது இணையத்திலிருந்து இலவச மென்பொருள்களை(Downloading Free software) தரவிறக்கம் செய்யும்போது கணினிக்கு தீங்கிழைக்கும் வைரஸ் நச்சு நிரல்களும்(Virus program) நம் கணனியில் இறங்கிக்கொள்ளும். இதனால் விளையும் தீங்கு என்ன என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.


இத்தகைய வைரஸ்களை வேரோடு ஒழிக்க பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சிறந்தொரு ஆன்டிவரைஸ் சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. Microsoft நிறுவனம் வெளியிட்டிருக்கும் இலவச ஆன்ட்டி வைரசின் பெயர் Microsoft Security Essentials

இது மிகச்சிறந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் என பயன்படுத்திய பலரும், இதற்கு சான்றிதழ் கொடுக்கின்றனர். அதிகபட்ச பாதுகாப்பை வழங்கக்கூடிய இந்த மென்பொருள், இணையத்தில் நாம் உலவிக்கொண்டிருக்கும்போது இணையப் பாதுகாப்பை வழங்கக்கூடியது. கூடவே வரும் பாடி கார்ட் போல இணையத்தில் உலவும்போது கணினியை கூடவே இருந்து வைரஸ் தாக்கம் வராதவாறு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகிறது. இலவச மென்பொருள்தான் என்றாலும், இதன் பணி கட்டண மென்பொருளுக்கு ஒப்பானது. கட்டண மென்பொருளைப் போன்றே செயல்படுகிறது. 

Microsoft Security Essentials for free

தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும்(Automatic update) வகையில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆன்ட்டி வைரஸ்... நமக்கு கிடைத்த ஒரு வரம் என வைத்துக்கொள்ள முடியும். இனி என்ன தாமதம்.. உடனே Microsoft Security Essentials - Free Antivirus Software -ஐ தரவிறக்கிப் பயன்படுத்திட வேண்டியதுதானே...!

Microsoft Security Essentials தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்: Download Microsoft Security Essentials anti virus software for free
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment