Blogger templates

கணினியை காக்கும் காவலன் Deep Freeze software.

வணக்கம் நண்பர்களே.. நேற்றி நிறைய வேலைப்பளு.. அதனால் பதிவெதுவும் எழுத இயலவில்லை. நண்பர்களே உங்கள் கணினியை பாதுகாக்க நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டிருப்பீர்கள்.
Anti virus நிறுவுதல், C Cleaner போன்ற மென்பொருள்களை நிறுவிப் பாதுகாத்து வந்திருப்பீர்கள். இருப்பினும் ஏதேனும் ஒரு சமயத்தில் உங்கள் கணினி இயங்காமல் போய்விடும். அல்லது வைரஸ் தாக்கம் வந்துவிடும். பாதுகாப்பாக இருந்தும் கூட உங்கள் கணினியை நீங்கள் ஒரு சில சமயம் வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பது கடினம்.
இணையம் பயன்படுத்துபவர்களுக்கு சொல்லவே வேண்டம். நொடிக்கொரு முறை வைரஸ்கள் ஆயிரக்கணக்கில் வந்து உங்கள் கணினியைப் பதம் பார்க்க வரிசையில் நிற்கும். இதுபோல் அல்லாமல் வைரசே இல்லாமல் செய்து, உங்கள் கணினி எந்நிலையில் தற்போது இருக்கிறதோ, அதே நிலையில் காலம் முழுவதும் வைத்திருக்க உதவுகிறது இம்மென்பொருள். மென்பொருளின் பெயர் Deep Freeze 

இம்மென்பொருளை இங்கு சென்று நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவும்போது மறக்காமல் C:/ வைத் தேர்ந்தெடுத்து நிறுவிக்கொண்டு இம்மென்பொருளுக்கு நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துவிட்டால் போதும். இனி நீங்கள் நினைத்தால் தவிர, மற்ற எவரும்  உங்கள் C:/டிரைவில் கை வைக்க முடியாது.

கணினியில் பாதிக்கும் வைரஸ்கள் ஏதும் அண்டாது.
ஒரு வேளை வைரஸ் வந்தால் கூட மீண்டும் உங்கள் கணினியை Restart செய்யும்போது உங்கள் கணினியின் பழையை நிலையை திரும்ப몮 பெற்றுவிடும். புதிதாக தாக்கிய வைரஸ் எதுவும் கணினியில் இருக்காது. இதுதான் இம்மென்பொருளின் சிறப்பம்சம். அதாவது கணினியில் மென்பொருளை நிறுவும்போது உங்கள் கணினி எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு மீண்டும் கொண்டுவந்துவிடும்.

ஒரு வேளை நீங்கள் C:/ Drive-ல் மாற்றம் செய்ய வேண்டியிருப்பின் System Tray உள்ள Deep Freeze Icon மீது ஷிப்ட் பட்டனை அழுத்தியவாறே டபுள் கிளிக் செய்யுங்கள். இப்போது தோன்றும் விண்டோவில் Status on next boot என்பதில் Boot Thawed என்பதை கிளிக் செய்து Ok கொடுங்கள்.

இப்போது நீங்கள் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். கணினி தொடங்கிய பிறகு உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை C:/ டிரைவில் மேற்கொள்ளலாம். ஏதாவது புதிய மென்பொருள்கள் நிறுவ வேண்டி இருப்பின் இந்த முறையைக் கையாளலாம்.

தேவையான மென்பொருளை நிறுவிவிட்டு மீண்டும் உங்கள் கணினியை பழைய நிலைக்கே கொண்டு வர Status on next boot என்னுமிடத்தில் Boot Frozen என்பதை கொடுத்து ok சேமித்துவிடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்துகொள்ளுங்கள். இனி மீண்டும் Deep Freeze செயல்படத் துவங்கிவிடும். தேவையில்லாமல் உங்கள் கணினியில் மாற்றம் செய்ய நினைப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் C:/ டிரைவை ஒரு சக்தி மிக்க பாதுகாவலான இருந்து Deep Freeze Software செயல்படும்.

இத்தகைய மென்பொருகள் Browsing center, Net Cafe, Educational Center, மற்றும் பொது இடங்களில் அமைந்துள்ள கணினிகளில் பயன்படுத்துகின்றனர். உங்கள் Personal Computer -களில் பயன்படுத்துவது உங்கள் கணினியின் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யும்.

மென்பொருளைத் தரவிறக்க:


தளத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு (English summary about this software): Deep Freeze by Faronics helps your computer run like new by memorizing your computer’s configuration and performing a full system recovery with every restart.

Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment