Blogger templates


இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011[Top10 earning blogs on net]

இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதில் முக்கியமான வழி இணையதளம் உருவாக்கி அதில் கிடைக்கும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. விளம்பரம் போடுவதால் அப்படி என்ன பெருசா சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. அப்படியே கொஞ்சம் கீழே இருக்குற லிஸ்ட் பாருங்க. இந்த வலைத்தளங்கள் எல்லாம் விளம்பரங்கள்மூலம் தான் அதிகளவு சம்பாதிக்கின்றன. 2011ல் இணையத்தில் அதிகளவு சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்களின் பட்டியலை கீழே பாருங்கள்.
பிரபல AOL நிறுவனத்தில் இணையதளமாகும். அலெக்சா ரேங்கில் 2000க்கும் கொஞ்சம் அதிகமான ரேங்க் பெற்றுள்ளது. இந்த பிளாக்கின் தற்போதைய மதிப்பு $1.28 மில்லியன் ஒரு நாளைக்கு சராசரியாக 1700$ சம்பாதிக்கிறது. இந்த தளத்தில் வருமானம் பெருமாளும் CPM விளம்பரம் மூலமே கிடைக்கிறது. 


இணையத்தில் அதிகம் சம்பாதிக்கு வலைப்பூக்களில் 9வது இடத்தில் இருப்பது இந்த வலைப்பூவாகும். அலெக்சா ரேங்கில் 1000 இடத்தில் உள்ளது. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $2.66 மில்லியன் ஆகும். நாளொன்றுக்கு சுமார் 3500$(இந்திய மதிப்பு சுமார் Rs.1,68,000)  இந்த தளம் சம்பாதிக்கிறது. இந்த வலைப்பூ பெரும்பாலும் Advertise bannerக்காக இடத்தை விற்பதன் மூலம் சம்பாதிக்கிறது. 
8. Gizmodo
எட்டாவது இடத்தில் உள்ள வலைப்பூ Gizmodo வலைப்பூவாகும். Gadget களின் வழிகாட்டியாக உள்ள தொழில்நுட்ப வலைப்பூவாகும். இந்த தளத்தில் 10-20 இடுகைகள் சராசரியாக ஒருநாளைக்கு வெளிவருகிறது. அலேக்சாவில் #600 ரேங்க் பெற்றுள்ளது. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $2.86 மில்லியன். ஒரு நாளைக்கு சுமார் 4000$ (இந்திய மதிப்பில் சுமார் Rs. 192000) ஆகும்.

இந்த வலைப்பூவின் உரிமையாளர் Nick Denton என்பவர். இதுவும் ஒரு தொழில்நுட்ப குறிப்புகள் வெளியிடும் தளமாகும். இந்த தளத்தின் தற்போதைய மதிப்பு $3.52 மில்லியன், ஒரு நாளைக்கு சுமார் $5000$ (இந்திய மதிப்பில் Rs.2,40,000) வருமானம் விளம்பர பேனர்கள் மூலம் கிடைக்கிறது. 

6. Tuts+
அலேக்சாவில் 623 வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை 722 பதிவுகள் இந்த தளத்தில் இருந்து வெளிவந்துள்ளது. ஒருநாளைக்கு சுமார் 5000$(Rs.240000) வரை வருமானம் வருகிறது. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $3.7 மில்லியன் ஆகும்.

Web designer கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளமாகும். முழுக்க முழுக்க வெப் டிசைனிங் சம்பந்தமான பதிவுகளே அதிகம் இருக்கிறது. அலெக்சா #578. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $4.66 மில்லியன் ஒருநாள் வருமானம் சுமார் 6382$ (Rs.3,06,336).


நாள்தோறும் வெளிவரும் புதுப்புது தயாரிப்புகளை உடனுக்குடன் அறியத்தரும் வலைப்பூ. அலேக்சாவில் #343 இடத்தை பெற்றுள்ளது. இந்த வலைப்போவின் தற்போதைய மதிப்பு $7.2 மில்லியன் ஒருநாளைக்கு சுமார் 10,000$ (Rs. 4,80,000) வரை வருமானம் வருகிறது. இணையத்தில் மிகவும் பிரபலமான தளமாகும். 

ஆங்கிலத்தில் தொழில்நுட்ப தகவல்கள் படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்த வலைப்பூவை. இந்த தளத்தில் பல ஊழியர்கள் பணி புரிந்து தகவல்களை அப்டேட் செய்கின்றனர். ஒருநாளைக்கு 20-30 இடுகைகள் வெளிவருகிறது.
இந்த தளத்தின் தற்போதைய மதிப்பு $10.82 மில்லியன் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 14,816$ (Rs.7,11,158) வருமானம் வருகிறது. இதன் அலெக்சா மதிப்பு #215.

மேலே கூறிய Techcrunch தளத்திற்கும் Mashable தளத்திற்கும் ஒரு போட்டியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வலைப்பூக்களும் போட்டி போட்டு கொண்டு இடுகைகளை எழுதி தள்ளுகின்றனர். இணையத்தில் மிகவும் பிரபலமான வலைப்பூ.அலெக்சா #184
இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $11.52 மில்லியன். ஒரு நாளைக்கு $15,781(Rs. 757,488) ஆகும். 


கடைசியாக ஆனால் முதல் இடத்தில் இருக்கும் வலைப்பூ. இணையத்தில் அதிகளவு சம்பாதிக்கும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் வலைப்பூ. இந்த வலைப்பூவின் ஒரு நாளைய வருமானம் $30,000 (Rs. 1,440,000). இந்த பிளாக்கின் தற்போதைய மதிப்பு $21.82 மில்லியன் ஆகும். 


இந்த பட்டியலை பார்க்கும் போது தலை சுத்துதுதா.. எனக்கும் அப்படிதான் இந்த தளங்களே இப்படின்னா இன்னும் கூகுள், பேஸ்புக் எல்லாம் எவ்ளோ சம்பாதிக்கும் எப்பா!!!!!

ஆனால் இந்த நிலை ஒரே இரவில் வந்தது கிடையாது இந்த வலைப்பூக்களுக்கு பின்னர் மிகப்பெரிய உழைப்பு உள்ளதை நாம் அறியவேண்டும்.
Source: Myboggertricks 
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment