Blogger templates


கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்


கூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .inஎன்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின் பட்டியல் காணாமல் போனது. தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. இண்ட்லியில் இணைத்தால் பரிந்துரை பட்டியலில் வராமல் சாதாரண பதிவாக வெளியிடப்பட்டது. கூகிள் பிளாக்கரை இவ்வாறு மாற்ற என்ன காரணம்? 

பிளாக்கர் தளத்தின் முகவரியை அந்தந்த நாடுகளில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி Redirect செய்கிறது. உதாரணமாக இந்தியாவிலிருந்து பார்த்தால் .in என்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .com.au என்று முடியும் படியாகவும் தெரியும். இதன் காரணம் பிளாக்கர் தளங்களை கூகிள் தணிக்கை செய்யப்போகிறது. முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டத்தின் படியாக தேவையில்லாத கருத்துகள் எனில் நாடு வாரியாக பிரித்தெடுத்து நீக்கி விடலாம். பிரச்சினையில்லாத மற்ற நாட்டினர் பார்த்துக் கொள்ளலாம்.

இதனை ccTLD (Country code top level domain ) என்று சொல்கிறது. மேலும் நாம் வலைப்பூவை குறிப்பிட்ட நாட்டிற்கேற்ப பார்த்துக் கொள்ள முடியும். குறிப்பிட்ட நாட்டின் முகவரிக்குப் பின் /ncr என்று கொடுப்பதன் மூலம் இவ்வாறு செய்ய முடியும். இது No Country Redirect என்று அழைக்கப் படுகிறது.

உதாரணமாக எனது வலைப்பூவை ஆஸ்திரேலிய நாட்டின் படி பார்க்க http://ponmalars.blogspot.com.au/ncr

குறிப்பிட்ட நாட்டைச் சாராமல் வலைப்பூவின் ஒரிஜினல் அல்லது இயல்பான வடிவத்தைப் பார்க்க முகவரியில் .com/ncr என்று கொடுப்பதன் மூலம் பார்க்க முடியும். உதாரணமாக http://ponmalars.blogspot.com/ncr

இதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு (Session) மட்டுமே செயல்படும். Domain வைத்திருப்பவர்களுக்கு இப்போது எதும் பிரச்சினையில்லை. இதனால் தேடுதலில் உங்கள் வலைப்பூவிற்கு எந்த மாற்றமும் இல்லை. கூகிளின் விளக்கம் இங்கே பார்க்கhttp://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=2402711

இதனால் ஏற்படும் சிக்கல்கள்:

1. அலெக்சா ரேங்க் :

பல நாடுகளில் இருந்து வலைத்தளத்தினைப் பார்க்கும் போது பல முகவரிகளில் தெரிவதால் அலெக்சா ரேங்க் என்பது தீர்மானிக்க முடியாத விசயமாக இருக்கும். கூகிள் அலெக்சா ரேங்கினை முக்கியமாக எடுத்துக் கொள்வதில்லை என்பது தனி விசயம்.

2. Followers Widget

இதில் பிளாக்கர் தளத்தில் உள்ள Add widget-> Followers மூலமாக வைத்திருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. கூகிளின் Friend Connect சேவை மூலம் வைத்திருப்பவர்களுக்கு We're sorry... This gadget is configured incorrectly. என்ற பிழைச்செய்தி காணப்படும். இதனால் பிளாக்கர் Design-> Page Layout-> Add Gadget கொடுத்து Followers Widget இன் மூலம் சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறை மட்டுமே எல்லா நாடுகளிலும் வேலை செய்யும்.

3. இண்ட்லியில் பதிவுகள் பரிந்துரையில் வராத பிரச்சினை. 

இண்ட்லி தற்போது முக்கிய வலைப்பூக்களைப் பரிந்துரைப் பட்டியலில் வைத்திருக்கிறது. அதனால் பதிவுகளை இணைக்கும் போது அந்த பழைய முகவரி இருந்தால் மட்டுமே பரிந்துரையில் வரும். இப்போது மாறி விட்டதால் சின்ன மாற்றம் செய்வோம். பதிவிலிருந்த படியே புதிய பதிவை இணைக்காமல் இண்ட்லி தளத்தில் சென்று இணைக்க என்பதைக் கிளிக் செய்யவும். நமது பதிவின் முகவரியை இட்டு அதில் .in என்பதை .com என்று மாற்றிச் சேர்த்தால் சரியாக பரிந்துரைப் பட்டியலில் வந்துவிடும்.
4. தமிழ்மணத்தில் இணைக்கும் போது.

தமிழ்மணத்தில் புதிய பதிவை இணைக்கும் போது கீழ்க்கண்டவாறு உங்கள் வலைப்பூ எங்கள் பட்டியலில் இல்லை என்று வரும். இதிலும் சின்ன மாற்றம் செய்ய வேண்டும். இந்த பிழைச்செய்தி வந்திருக்கும் விண்டோவில் மேலே இருக்கும் இணைய முகவரிக்குச் செல்லவும். (URL Address) . தமிழ்மணத்தில் இணைக்கும் போது முகவரியானது இப்படி இருக்கும்.

http://tamilmanam.net/blog_home_update.php?url=http://ponmalars.blogspot.in&posturl=http://ponmalars.blogspot.in/2012/01/railway-ticket-booking-websites.html

இந்த இணைப்பில் நமது வலைப்பூவின் முகவரியில் இருக்கும் .in என்பதை .com என்று மாற்றி விட்டு Refresh அல்லது Enter தட்டவும். இப்போது உடனே தமிழ்மணம் சேர்த்து விடும். இந்த முறையில் உங்கள் பதிவுகளைச் சேர்க்கவே முடியும். ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்யாது. இதனைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகவரி மாற்ற பிரச்சினையால் திரட்டிகளில் இணைப்பது பிரச்சினைக்குரிய விசயமே.

Update :

தமிழ்மணம் தளத்தில் பதிவுகள் சேர்ப்பது பற்றிய அவர்கள் வெளியிட்டுள்ள
கட்டுரை. http://blog.thamizmanam.com/archives/387

மேலும் சில நண்பர்களின் பதிவுகள்:
1.தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் - பிளாக்கர் நண்பன்
2.பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி - வந்தே மாதரம்



Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment