இணையத்தில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வீடியோக்களைத் தரவிறக்க
இதற்கென NirSoft வழங்கும் எளிமையான மென்பொருள் தான் Video CacheView. இந்த மென்பொருளின் மூலம் நீங்கள் ஏற்கனவே இணையத்தில் பார்க்கப்பட்ட வீடியோக்களைத் தரவிறக்கலாம். இணையத்தில் நீங்கள் பார்க்கும் எல்லா வீடியோக்களும் தற்காலிகமாக உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்டுத் தான் உங்களுக்கு ஒளிபரப்பாகும். இந்த செயல் Buffering என்று சொல்லப்படும். இணையம் குறைவான கணிணிகளில் வீடியோ பார்க்கும் போது Buffering என்று வருவதைப் பார்க்க முடியும். இவையெல்லாம் கணிணியில் Temporary Folder இல் சேமிக்கப்பட்டுப் பின்னர் தான் உங்களால் பார்க்க முடிகிறது. இதனை நீங்கள் அந்த தற்காலிக முகவரியில் போய் எடுக்க முடியாது. ஏனெனில் இந்த தற்காலிக கோப்புகள் பயன்படுத்த முடியாதபடி பூட்டப்பட்டிருக்கும்.
இந்த மென்பொருளில் நீங்கள் இணையத்தில் ஏற்கனவே பார்க்கப்பட்ட Cache Video கோப்புகளை பட்டியலிடும். குறிப்பிட்ட வீடியோ தற்போது எடுக்க முடியும் படி இருந்தால் In Cache என்பதில் Yes என்று இருக்கும். அதனை வலது கிளிக் செய்து Copy Selected Files To என்பதைத் தேர்வு செய்து உங்கள் கணிணியில் சேமித்துக் கொள்ளலாம். தற்காலிக சேமிப்பில் இல்லாதவற்றை அங்கிருந்தே டவுன்லோடு செய்து கொள்ள முடியும். மேலும் இதில் இணையத்தில் ஏற்கனவே கேட்கப்பட்ட ஆடியோ கோப்புகளையும் தரவிறக்கிக் கொள்ளலாம்.உங்கள் கணிணியில் FLV வீடியோக்களுக்கான பிளேயர் எதேனும் நிறுவியிருந்தால் இந்த மென்பொருளிலிருந்தே அந்த வீடியோவைப் பார்க்க முடியும். VLC மீடியா பிளேயரில் பார்க்க Open with கொடுத்து தான் பார்க்க வேண்டும். இந்த மென்பொருள் IE, Chrome, Firefox, Opera போன்ற வலை உலவிகளில் பார்க்கப்பட்ட வீடியோக்களை ஆதரிக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் உங்களுக்கு சில நேரம் பயனளிக்கலாம்.
தரவிறக்கச்சுட்டி: Download Video Cacheview
POSTED BY makishan
About new news in france
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment