எக்சல் தகவல்களை HTML அட்டவணையாக எளிதில் மாற்ற
எக்சல் (Excel) தகவல்களை வரிசை, நெடுவரிசையாக அட்டவணை வடிவில் சேமித்து வைக்கவும் எளிதாகப் படிக்கவும் உதவும் மென்பொருளாக இருக்கிறது. எக்சலின் Table பார்மேட்டில் இருக்கும் தகவல்களை உங்கள் வலைத்தளத்தில் /பிளாக்கில் சேர்ப்பதற்கு நினைத்தால் அதனை HTML வடிவில் மாற்றியாக வேண்டும். அதற்கு எக்சல் கோப்பை Save as web என்று கொடுத்து சேமிக்க வேண்டும். இதற்குப் பின்னர் அந்த Html கோப்பில் Table ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடிவடையும் வரிகள் வரை கண்டுபிடித்து காப்பி செய்து பிளாக்கரில் போட வேண்டும். இது ஒரு சிக்கலான வேலையாக அமைந்து விடும். இதனை எளிமையாக மாற்றித்தர Tableizer என்ற இணையதளம் உதவுகிறது. இந்த தளம் உங்களின் எக்சல் கோப்பில் இருக்கும் தகவல்களை HTML வடிவில் எளிமையாகவும் அழகாகவும் இணையதளத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாற்றித் தருகிறது. எக்சல் கோப்பில் உங்களுக்குத் தேவையான செல்களை முதலில் காப்பி செய்து கொண்டு இந்த தளத்திற்கு சென்று அங்கே உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்யவும்.
* உங்களுக்குப் பிடித்த எழுத்து அளவினையும் (Font Size), எழுத்துரு வகையினையும் (Font Name), தலைப்பிற்கான வண்ணத்தையும் (Header Color) தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் Tableize it என்ற பட்டனைக் கிளிக் செய்தால் அழகான HTML Table தயார்.* இந்த நிரல்வரிகளை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் பதிவு எழுதும் போது வேண்டிய இடத்தில் Edit Html என்பதைக் கிளிக் செய்து பேஸ்ட் செய்து கொண்டால் பதிவில் அட்டவணை வடிவில் அழகாகத் தோன்றும். உங்களுக்கு HTML/CSS போன்றவற்றில் அனுபவம் இருந்தால் நிரல்வரிகளில் இன்னும் மாற்றங்களை செய்து அழகாக்கலாம்.
இணையதளம் : http://tableizer.journalistopia.com
| No | Design | Name | Size | WARP | WEFT | REED |
|---|---|---|---|---|---|---|
| 7112 | 12700 A | PLACE MAT | 33X48 | 2/20'S | 2'S | 48 |
| 7113 | 12700 B | PLACE MAT | 33X48 | 2/20'S | 2'S | 48 |
| 7114 | 12700 C | PLACE MAT | 33X48 | 2/20'S | 2'S | 48 |
| 7115 | 12700 D | PLACE MAT | 33X48 | 2/20'S | 2'S | 48 |
About new news in france
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.