Blogger templates


மற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:34.54 மு.ப GMT ]
உங்கள் கணணி நீங்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?
சில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா? விண்டோஸ் 7 இயங்குதளம் இதற்கான வழிகளைத் தருகிறது.
இதற்கு ஒரு தீர்வாக குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால் இதனைச் செயல்படுத்த முடியாது.)
விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு gpedit.msc என டைப் செய்திடவும். பின்னர் Enter அழுத்துங்கள்.
இங்கு கிடைக்கும் User Configuration பட்டியில் Administrative Templates என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் System என்ற கோப்பறையில் கிளிக் செய்திடவும்.
இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில் கீழாகச் சென்று Run only specified Windows applications என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு Enabled என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள Show என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இப்போது Show டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர்களை அமைத்து பின்னர் OK பட்டனைக் கிளிக் செய்திடவும்.
எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பயர்பொக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் FireFox.exe என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முற்படுகையில் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment