Blogger templates


புகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்க
[ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 02:08.17 மு.ப GMT ]
புகைப்படங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையத்தளங்கள் உள்ளன.
சிலவற்றின் போர்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம்.
படங்களைத் தலைகீழாகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப்படுவார்கள்.
இந்த ஆசைகளை நிறைவேற்றும் வகையில் Image Splitter என்ற இணையத்தளம் செயல்படுகிறது.
இந்த தளத்திற்குச் சென்றவுடன் நாம் எந்த படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட கோப்பை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
கோப்பின் அளவு 20 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்னவகையான செயல்பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு தரவிறக்கம் செய்திடக் கிடைக்கும். இதனை நாம் தேர்ந்தெடுக்கும் டைரக்டரியில் சேவ் செய்து பயன்படுத்தலாம்.
இந்த தளத்தின் மூலம் jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய போர்மட்கள் கையாளப்படுகின்றன. போர்மட் மாற்றுவதில் மட்டுமின்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட உங்களுக்கு எந்த போர்மட்டில் தேவையோ அந்த போர்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
படம் ஒன்றை ரீசைஸ் செய்வதற்கு எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ அந்த அளவினை தந்தால் போதும்.
அளவுகளைத் தந்த பின் Resize image என்ற பட்டனில் கிளிக் செய்தால் அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் என்ன சிறப்பு எனில் நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல் அளவிற்கு மாற்றினால் அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம் கிடைக்கும்.
மேலும் நாம் தரும் வரையறைகளின் படி ஒரு படத்தை மிகச் செம்மையாக வெட்டிப் பல கோப்புகளாக இந்த தளம் தருகிறது. பட கோப்பு ஒன்றை பதிவேற்றம் செய்துவிட்டு, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை(Rows & Columns) என மட்டும் கொடுத்தால் போதும். உடன் ஒரு ஸிப் பைலாக இது தரப்படும்.
அதனை விரித்து பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம். எடுத்துக்காட்டாக நான்கு சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால், 2 படுக்கை வரிசை மற்றும் 2 நெட்டு வரிசை எனத் தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும்.
இதற்குப் பதிலாக 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row and 4 columns எனத் தர வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில் படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த பின்னர் நமக்கு ஓகே என்றால் வெட்டுவதற்கு ஓகே சொல்லலாம்.
இதே போல படங்களின் அளவினைச் சரி செய்திடலாம். மேலே குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த புரோகிராமினையும் தரவிறக்கம் செய்து பதிய வேண்டியதில்லை.
புதிதாக கணக்கு எதனையும் திறக்க வேண்டியதில்லை. கடவுச்சொல் எதுவும் கிடையாது.http://imagesplitter.net/
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment