Blogger templates


பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய(10-03-12)

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

1. Google Chrome
இணைய உலகில் மிகப்பெரிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் உலவி. இதன் வளர்ச்சி மற்ற பிரவுசர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில இருந்த பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்த உலவி. இந்தியாவில் முதல் இடத்தில இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இப்பொழுது இந்த உலவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Chrome 17.0

2. Firefox
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox 11.0 Beta 7

3. Windows 8 Consumer Preview
உலகில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் இயங்கு தளங்களில் விண்டோஸ் முக்கியமான ஒன்று பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் மென்பொருளாகும். சமீபத்தில் விண்டோஸ் 7 வெளியிட்டு விற்ப்பனையில் சக்கை போடு போட்டது. இப்பொழுது இதன் அடுத்த வெர்சனாக windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது. கணினி, டேப்லெட், மொபைல் என அனைத்திலும் உபயோகப்படுத்தும் படி இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம். ஆனால் இந்த மென்பொருள் Beta நிலையில் தான் உள்ளது. இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய Windows 8 Beta இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்.


4. VLC Media Player
இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் இருந்தாலும் இன்றும் பெரும்பாலானவர்களின் விருப்பமான மென்பொருளாக VLC Media Player மென்பொருள் திகழ்கிறது. இந்த மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் உள்ள சில பிரச்சினைகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இதற்க்கு VLC2.0 "Two Flower" என பெயரிட்டு உள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - VLC 2.௦0 இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய இங்கு செல்லவும்.

5. Avast anti-virus
தொழில்நுட்பம் வளர வளர கணினிகளுக்கு பிரச்சினைகளும் அதிகமாகி கொண்டே இருக்கு. நாளுக்கு நாள் புதிய புதிய வைரஸ்கள் மால்வேர்கள் என்று ஏதாவது ஒன்று நம் கணினிகளை தாக்குகின்றன. இந்த தீங்கிழைக்கும் வைரச்களிடம் இருந்து நம் கணினிகளை காக்க ஆண்டிவைரஸ் மென்பொருளை உபயோகிக்கிறோம். இணையத்தில் இலவசமாக கிடைக்கும் Avast anti-virus மிகவும் பிரபலமான மென்பொருளாகும். இந்த மென்பொருளின் புதிய பதிப்பை இப்பொழுது வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - Avast 7.0 
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment