Blogger templates


கூகுள் குரோமில் நீங்கள் விரும்பிய மொழியை மாற்றுவதற்​கு
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:12.17 பி.ப GMT ]
கணணி என்பது இன்று ஆங்கில மொழியினாலேயே ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கின்றது. எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனேகமானவர்களால் பயன்படுத்தப்படும் போது சில சந்தர்ப்பங்களில் மொழிப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அதாவது தங்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே பயன்படுத்துவதற்கு அனைவரும் முனைவார்கள். இதற்காக கணணி பயன்படுத்தும் போது அதிக இடங்களில் மொழியை மாற்றக்கூடிய வசதி காணப்படுகின்றது.
அதற்கிணங்க கூகுள் குரோமின் மொழியை மாற்றுவதற்கு பின்வரும் படிமுறைகளை கையாள வேண்டும்.
1. கூகுள் குரோமை இயக்கி முதலில் படத்தில் காட்டியவாறு குறடு வடிவில் இருக்கும் சின்னத்தின்மீது கிளிக் செய்ததும் தோன்றும் மெனுவில் options என்பதை தெரிவு செய்யவும்.
2. தோன்றும் விண்டோவில் Under the Hood  என்பதை தெரிவு செய்து அதன் வலது புறத்தில் காணப்படும் Web content என்பதில் Languages and Spell-Check Settings ஐ தெரிவு செய்யவும்.
3. தற்போது Add பட்டனை அழுத்தி தோன்றும் பொப்பப் மெனுவில் நீங்கள் விரும்பிய மொழியை தெரிவு செய்யவும்.
4. மொழியை தெரிவு செய்தபின் Display Google Chrome in this language என்ற பட்டனை அழுத்தி பின் குரோமை ஒருமுறை Restart செய்யவும்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment