Blogger templates


போட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்


அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை (Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. போட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணிணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

PSD வகை கோப்புகள் உங்களிடம் பகிரப்படும் போது போட்டோஷாப் இல்லாவிட்டால் என்ன செய்வது? அவசரத்திற்கு அந்த கோப்பைப் பார்க்க வேண்டும். சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு போட்டோஷாப் மென்பொருளை நிறுவாமலே இந்த வகை கோப்புகளைப் பார்க்க சில இலவச மென்பொருள்கள் உதவுகின்றன.

இவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றைப் பயன்படுத்தும் போது குறைந்த நினைவகமே தேவைப்படும். போட்டோஷாப் பயன்படுத்தும் போது அதற்கு மட்டுமே கணிணியின் 50 சதவீத நினைவகம் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் கணிணியின் வேகம் குறைந்து காணப்படும். ஆனால் கீழே குறிப்பிட்டிருக்கும் மென்பொருள்களின் மூலம் போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் வேகமாக மாற்றங்களைச் செய்யவும் முடியும்.

1.Paint.net

இந்த மென்பொருள் சிறப்பான முறையில் ஒளிப்படங்களை நிர்வகிக்க உதவுகிறது. போட்டோசாப்பில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் இதிலும் செய்ய முடியும். பயன்படுத்திப் பார்த்தால் இதன் அருமை உங்களுக்குப் புரியும். உண்மையில் இலவச மென்பொருள்களில் சிறப்பானதாக இருக்கிறது.
இதில் போட்டோஷாப் கோப்புகளைத் திறப்பதற்கு Plugin ஒன்றையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதலில் கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து Paint.net மென்பொருளை தரவிறக்கி கணிணியில் நிறுவிக் கொள்ளவும்.
http://www.getpaint.net/index.html


அடுத்து Photoshop Plugin சேர்க்க கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கம் செய்யவும்.
http://www.4shared.com/get/R9wH-POu/PhotoShop.html

உங்கள் கணிணியில் Paint.net நிறுவப்பட்டுள்ள இடத்திற்குச்செல்லவும்.
C:\Program Files\Paint.NET\FileTypes
இந்த போல்டரில் தரவிறக்கம் செய்த Photoshop.dll கோப்பை பேஸ்ட் செய்யுங்கள். பிறகு போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் எடிட் செய்யவும் முடியும்.

2.Gimp

லினக்ஸ் இயங்குதளத்திற்கு உருவாக்கப்பட்டு பின் விண்டோசிலும் இயங்கும் இந்த மென்பொருளும் Photoshop க்கு சிறந்த மாற்றாக இருக்கிறது. இது ஒரு சுதந்திர மென்பொருளும் கூட. (Open Source)
http://www.gimp.org/downloads/

3. IrfanViewer.
இந்த மென்பொருள் விரைவாக ஒளிப்படங்களை எடிட் செய்யவும் கன்வெர்ட் செய்யவும் பயன்படுகிறது. இதில் எல்லாவகையான் ஒளிப்படங்களையும் பார்க்க முடியும். போட்டோஷாப் கோப்புகளை இதில் பார்க்க மட்டுமே முடியும்.
http://www.irfanview.com/main_download_engl.htm 
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment