Blogger templates


கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க


கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும்.

யாராவது வரும் போது சட்டென்று தேவையில்லாத மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்கிற மாதிரி வசதியுடைய மென்பொருள்கள் இரண்டைப் பார்ப்போம். இந்த மென்பொருள்களை நாம் சிறிது நேரம் வெளியே செல்லும் போதும் போட்டு விட்டுச் செல்ல்லாம். எந்த மென்பொருளும் யார் கண்களுக்கும் புலப்படாதிருக்கும்; Task Bar இல் கூட உட்கார்ந்திருக்காது. அதே போல சிலர் புத்திசாலியாய் ALT+TAB பட்டன்களை அழுத்துவதன் மூலம் தற்போது திறந்து வைத்திருக்கிற புரோகிராம்களைப் பார்க்கலாம். இதில் அந்த வேலையும் நடக்காது.

1. NCS WinVisible

இந்த மென்பொருளில் ஒரு குறுக்கு விசையை (Shortcut Key) அழுத்துவதன் மூலம் அனைத்து மென்பொருள்களையும் இந்த மென்பொருள் உட்பட ஒரே விநாடியில் மூட முடியும். முன்னரே வேண்டாத புரோகிராம்களைத் ( யாரும் பார்க்க்கூடாத) தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில் ஒவ்வொரு மென்பொருளாகவும் மறைக்க முடியும்.
இதன் Settings பகுதியில் சென்று Hot keys இல் உங்களுக்குப் பிடித்த குறுக்கு விசையை அமைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருள் எப்போதும் Hidden லேயே இருக்கும்படியும் செய்யலாம். Settings-> General -> Behaviour பகுதியில் இருக்கும் மூன்று அமைப்புகளையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Automatically check new processes,
Remember the processes I checked,
Hide Application and Tray icon

தரவிறக்கச்சுட்டி : Download WinVisible

2. Hide It

எளிமையான நிறுவத் தேவையில்லாத மென்பொருள் இது. டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகான்களைக் கூட இது மறைக்கும். Task bar இல் இருக்கும் இதனைத் திறந்து எளிமையாக ஒரே கிளிக்கில் ஒவ்வொரு மென்பொருளாக அல்லது அனைத்து மென்பொருளையும் விநாடியில் மறைக்கலாம்.
இதன் இன்னொரு வசதி என்னவென்றால் தேவையான புரோகிராம்களை மறைத்து விட்டு இந்த மென்பொருளையும் Exit கொடுத்து மூடி விடலாம். பிறகு கொஞ்ச நேரம் கழித்து இந்த மென்பொருளைத் திறந்து மறைந்துள்ள புரோகிராம்களைத் திறந்து கொள்ளலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download HideIt

இந்த இரண்டு மென்பொருள்களில் எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதைப் பயன்படுத்தி அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம்
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment