இலவச FreeMake வீடியோ/ஆடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்கள்
கணிணியில் ஆடியோ/வீடியோ கோப்புகளைப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க மாட்டோம். பல வடிவங்களில் பகிரப்படும் கோப்புகள் குறிப்பிட்ட கருவியில் செயல்படும். மற்றொரு கருவியில் செயலபடாது. ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வகையான பார்மேட்கள் இருப்பதே பிரச்சினை. இதற்கு நமக்குத் தேவைப்பட்ட பார்மேட்டில் மாற்ற கன்வெர்ட்டர் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. FreeMake என்ற நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் இரண்டு மென்பொருள்களைப் பற்றிப் பார்ப்போம். 1.Freemake Video Converter
மற்ற எந்த இலவச வீடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்களும் செய்யாத பல வேலைகளை இந்த மென்பொருள் செய்கிறது. இந்த மென்பொருள் செய்யும் அற்புதமான பணிகள் கீழே:
1. 200 க்கு மேற்பட்ட வீடியோ வகைகளை ஆதரிக்கிறது. AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS, etc..ஒளிப்படங்கள், ஆடியோ கோப்புகள் இவற்றை வைத்தும் வீடியோவாக கன்வெர்ட் செய்ய உதவுகிறது.
2. ஆன்லைன் வீடியோக்களை நேரடியாக கன்வெர்ட் செய்யலாம். இதில் வீடியோ முகவரியை உள்ளிட்டால் போதும்.
3. AVI, WMV, MP4, MPEG, MKV, FLV, SWF, 3gp போன்ற வகைகளிலும் பிளாஷ் வீடியோ கோப்பாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
4. ஆப்பிள், சோனி, ஆண்ட்ராய்டு போன்ற கருவிகளுக்கு ஏற்ப வீடியோக்களைத் தரப்படுத்திக் கொள்ளலாம். (Optimize for sony, apple, android)
5. CUDA மற்றும் DXVA என்ற தொழில்நுட்பம் மூலம் வீடியோக்களை விரைவாக கன்வெர்ட் செய்யும் திறனுடையது.
6.வீடியோக்களை புளுரே (Blue ray) வாக மாற்றலாம்.
7.வீடியோக்களில் Subtitles சேர்க்கலாம்.
8.ஒளிப்படங்கள், பாடல்களை நேரடியாக யூடியுபில் ஏற்றலாம்.
9.ஒளிப்படங்கள் மற்றும் ஆடியோவை வைத்து ஸ்லைட் ஷோ உருவாக்கலாம்.
10. வீடியோக்களை வெட்டலாம், இணைக்கலாம். Rotate செய்யலாம், Aspect Ratio வை மாற்றலாம்.
இவ்வளவு வேலைகளையும் ஒரே மென்பொருளில் எளிமையாகவும் விரைவாகவும் செய்யலாம். பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.
தரவிறக்கச்சுட்டி:http://www.freemake.com/free_video_converter/
2.Freemake Audio Converter
இந்த நிறுவனத்தின் மற்றொரு படைப்பான இந்த மென்பொருளின் மூலம் நம்மிடம் இருக்கும் ஆடியோ கோப்பை Mp3 பிளேயர், iPod, iPhone, iPad போன்ற கருவிகளில் பாடக்கூடியவாறு மாற்றலாம். இதில் Mp3, wmv, wma, flac, aac போன்ற வடிவங்களைப் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளின் மூலம் ஆடியோ வகைகளை மாற்றுவது மட்டுமின்றி பல ஆடியோ கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து இணைக்க முடியும் (Merge Audio files) என்பது இதன் சிறப்பான விசயமாகும்.
மேலும் பல்வேறு வகையான DVD, H.264, AVI, MPEG, MP4, MKV, DIVX, MOV, WMV, VOB, 3GP, RM, QT, FLV, etc… வீடியோ கோப்புகளிலிருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்கும் வசதியும் கொண்டிருக்கிறது. இதிலிருந்து Mp3 கோப்புகளை iTunes க்கு அனுப்பிக் கொள்ள முடியும். ஆடியோவை சிடி/டிவிடியில் எழுதும் வசதி விரைவில் வரும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு மென்பொருள்களின் பயனர் இடைமுகம் (User interface) பயன்படுத்த எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.தரவிறக்கச்சுட்டி:http://www.freemake.com/free_audio_converter/
POSTED BY makishan
About new news in france
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.