Blogger templates



பேஸ்புக் சாட் பட்டியலில் ஆன்லைனில் இருப்பவர்கள் மட்டும் காட்ட - Facebook Chat Fix

பிரபல சமூக இணையதளமான பேஸ்புக் தளத்தை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. உலகம் 800 மில்லியன் வாசகர்கள் உள்ள ஒரே சமூக இணையதளம் பேஸ்புக். இதில் உள்ள முக்கியமான வசதிகளுள் ஒன்று பேஸ்புக் சாட் வசதியாகும். பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க உதவுவது இந்த பேஸ்புக் சாட் வசதியாகும். இதில் உள்ள ஒரு குறை என்ன வென்றால் சாட் பட்டியலில் ஆன்லைனில் இருப்பவர்கள் மட்டுமின்றி ஆப்லைனில் உள்ளவர்களையும் காட்டும். இதனால் தேவையில்லாமல் பட்டியலின் நீளம் பெரியதாக காணப்படும். இந்த பிரச்சினையை தவிர்த்து பேஸ்புக் சாட்டில் ஆன்லைனில் இருப்பவர்களை மட்டும் தெரியவைப்பது எப்படி என பார்க்கலாம்.

குரோம் உலவி உபயோகிப்பவர்கள் சுலபமாக இந்த பிரச்சினை தீர்த்து விடலாம். இந்த லிங்கில்கிளிக் செய்து குரோம் நீட்சியைஇன்ஸ்டால் செய்தால் போதும் அடுத்த நிமிடம் உங்களின் பேஸ்புக் சாட் பட்டியலில் காணப்படும் மாற்றத்தை காணுங்கள்.

நீட்சியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் இருந்த பேஸ்புக் சாட் பட்டியல்


நீட்சியை இன்ஸ்டால் செய்த பிறகு உங்களின் பேஸ்புக் சாட் 


படங்களை பார்த்தவுடன் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்து இருக்கும். நீங்களும் இந்த நீட்சியை உங்கள் குரோம் உலவியில் இணைத்து ஆப்லைன் நபர்களை மறைத்து கொள்ளுங்கள். 
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment