Blogger templates


இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher


இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய பார்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய பார்மேட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன. 

இணையத்தில் இதற்கு ஒரு வழியும் இருக்கிறது.WebVideoFetcher என்ற இந்த இணையதளம் கூகிள், பேஸ்புக், யூடியுப் (Google, youtube, facebook) போன்ற வீடியோ தளங்களிலிருந்து நேரடியாக நமது கணிணிக்கு வீடியோக்களைத் தரவிறக்க உதவுகிறது. நீங்கள் எதேனும் இணையதளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடித்திருந்தால் அதன் இணைய முகவரியை காப்பி செய்து இந்த தளத்தில் இட்டு Download என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.


இந்த தளத்தின் மூலமே FLV, AVI, Mp4, Mp3, AAC போன்ற வகைகளில் குறிப்பிட்ட வீடியோவை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை Low Quality, Medium, High Quality போன்ற தர அளவுகளில் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பாகும். ஆடியோ வகைகளிலும் இந்த தர நிர்ணயம் இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒத்து வருகிற தரவிறக்க அளவுக்கேற்ப
(Download size) பெற முடியும்.


இணைய முகவரி : http://www.webvideofetcher.com

இந்த இணையதளத்தின் சேவையைப் பயன்படுத்த உங்கள் கணிணியில் ஜாவா வசதி அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழே கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
http://www.java.com/en/download/



Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment