Blogger templates

பிளாக்கரில் Static Page-ல் தெரியும் Readmore பட்டனை மறைக்க

பிளாக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பதவிகளில் முகப்பு பக்கத்தில் முழு பதிவையும் காட்டாமல் சிறு முன்னோட்டம் மட்டும் தெரியும் படி வைத்து கீழே Readmore என்ற பட்டன் வைத்திருப்போம். வாசகர்கள் அந்த Readmore பட்டனை அழுத்தியவுடன் நம் முளுபதிவையும் திறக்கும் படி வைத்திருப்போம் இதை நம்மில் பெரும்பாலனவர்கள் உபயோகிக்கிறோம்.
(இந்த வசதியை உபயோகிக்காதவர்கள் எனது இந்த முந்தைய நம்முடைய பிளாக்கில் அனிமேட்டட் Readmore பட்டன் கொண்டு வர பதிவிற்கு சென்று தங்கள் தளத்தில் இந்த வசதியை பெற்று கொள்ளுங்கள்.)

இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் நம் பிளாக்கில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் Static Page -லும் இந்த பட்டன் வந்து விடும். இதனால் Contact Me பக்கத்திற்கு செல்லும் நண்பர்களுக்கு இந்த Readmore பட்டன் தெரிவதால் நண்பர்கள் இன்னும் விவரகள் முடியவில்லை இருக்கின்றன என நினைத்து இந்த Readmore பட்டனை க்ளிக் செய்வார்கள். ஆனால் திரும்பவும் அதே விவரங்கள் தான் வந்திருக்கும். இது நம் வாசகர்களில் நேரத்தை தான் வீணடிக்கும் ஆகையால் இந்த Satic Page ல் உள்ள இந்த Readmore பட்டனை எப்படி மறைப்பது என்று இங்கு பார்ப்போம்.

• பிளாக்கரில் Static பக்கத்தில் தெரியும் Readmore பட்டனை மறைக்க இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DESIGN - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE- சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும்.
<b:if cond='data:blog.pageType != "item"'>

Read More ->>

</b:if>
அல்லது
<b:if cond='data:blog.pageType != "item"'>

</b:if>

• மேலே உள்ள இரண்டு வகை கோடிங்கில் ஏதேனும் ஒருவகையில் தான் உங்கள் பிளாக்கில் சேர்த்து வைத்துள்ள READMORE படனுக்கான கோடிங் இருக்கும்.
• அந்த கோடிங்கை முழுவதும் தேர்வு செய்து அழித்து விடுங்கள். அதற்க்கு பதிலாக கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பழைய கோடிங் இருந்த அதே இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
<b:if cond='data:blog.pageType == "static_page"'>

<b:else/>
<b:if cond='data:blog.pageType == "index"'>

</b:if>
</b:if>

• மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து சரியான இடத்தில் பேஸ்ட் செய்ததும் இந்த கோடிங்கில் உள்ள IMAGE URL OF READ MORE BUTTON என்ற இடத்தில் உங்கள் READMORE பட்டனுக்கான URL கொடுத்து SAVE TEMPLATE கொடுத்து விடவும்.
• இப்பொழுது உங்கள் பிளாக் செஇன்று உங்கள் பிளாக்கில் நீங்கள் கொடுத்து உள்ள STATIC பக்கத்தை பாருங்கள் அதில் இருந்த READMORE பட்டன் மறைக்க பட்டிருக்கும்.

கீழே சில READMORE பட்டங்கள் உங்களுக்காக

(இந்த படங்களின் மீது உங்கள் மவுசின் கர்சரை வைத்து வலது க்ளிக் செய்து COPY IMAGE URL கொடுத்தால் அந்தந்த படங்களின் URL பெறலாம்)

(இந்த படங்களின் மீது உங்கள் மவுசின் கர்சரை வைத்து வலது க்ளிக் செய்து COPY IMAGE URL கொடுத்தால் அந்தந்த படங்களின் URL பெறலாம்)

பதிவில் மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்ப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.

டுடே லொள்ளு

அந்த நெருப்ப அணைக்கிறத விட்டுட்டு அந்த தண்ணிய எடுத்து எங்க வயித்துல அடி இங்கே அதைவிட அதிகமான தீ எரிந்து கொண்டு இருக்குது
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment