Blogger templates

பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற - Disable Timeline



உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும் புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம் பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.
  • முதலில் இந்த  Timeline Remove லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
  • இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.

  • இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ்புக்கை உபயோகித்து மகிழுங்கள்.
Note: இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம்  எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம். 

இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment