Blogger templates

எல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்!


எல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்!

நண்பர்களே,
நாம் தமிழ் திரைப்பட பாடல்களை ஆன்லைன் மூலமாகவும் கேட்கிறோம், அல்லது தரவிறக்கம் செய்தும் கேட்கிறோம். ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது என்றால் நான் ஒவ்வொரு பாடலாக தான் தரவிறக்கம் செய்கிறோம். அந்த ஐந்து பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய FLASHGET DOWNLOAD MANAGER என்ற மென்பொருள் உதவுகிறது. நிறைய நண்பர்கள் இந்த தரவிறக்க மென்பொருளை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரே கிளிக்கில் ஒரு பாடல்கள் தொகுப்பை எவ்வாறு தரவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

FLASHGET DOWNLOAD MANAGER மூலம் தரவிறக்கம் செய்ய FIREFOX BROWSER யூஸ் செய்ய வேண்டும். ஏனெனில் FIREFOX ஆனது, FLASHGET ஐ ஒரு ADD-ON ஆக இணைத்துக்கொள்கிறது. எனவே FIREFOX BROWSER மூலம் தரவிறக்கம் செய்யப்படும் அனைத்தும் FLASHGET மூலமாகவே தரவிறக்கம் செய்யப்படுகிறது.
TAMILWIRE என்ற இணைய தளம் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய நன்கு ஒத்துழைக்குது. TAMILWIRE இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்பட பாடல்கள் கொட்டிக் கிடக்கிறது. புதிய படங்கள் முதல் பழைய படங்கள் வரை பாடல்கள் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நிறைய பாடல்கள் தொகுப்பும் உள்ளது. 
சரி, விஷயத்துக்கு வருவோம். TAMILWIRE இணைய தளத்தில் ஒரு பாடல் தொகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். 
நான் POOVAI UNNAI NESITHEN (15 TAMIL SONGS)  என்ற தொகுப்பை எடுத்துக் கொண்டேன். 
அந்த URL ஐ ஓபன் செய்தால் கீழ்க்கண்டவாறு பாடல்கள் பக்கம் ஓபன் ஆகும்.
இதில் முதலில் உள்ள பாடல் மேல் ரைட் கிளிக் செய்தால் ஓபன் ஆகும் பக்கத்தில் சீன எழுத்தில் மூன்று OPTION கள் இருக்கும். அதில் முதலாவது இருக்கும் OPTION ஐ கிளிக் செய்தால் அந்த ஒரு பாடல் மட்டுமே தரவிறக்கம் ஆகும். இந்த முறையில் தரவிறக்கம் செய்தால் ஒவ்வொரு பாடலுக்கும் நாம் மீண்டும் மீண்டும் கிளிக் செய்து தரவிறக்க வேண்டும். இம்முறையில் நாம் ஒவ்வொரு பாடலும் தரவிறக்கம் ஆகும் வரை அடுத்த பாடலை தேர்ந்தெடுக்க காத்திருக்க வேண்டும். இதற்கு ஒரு தீர்வு தான் இரண்டாவது OPTION இல் உள்ளது. 


அதை கிளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்
அதில் மேலே CHOOSE FILE TYPE இல் காட்டப்பட்டுள்ள வகைகளில் MP3 ஐ மட்டும் வைத்து விட்டு மற்ற டிக் மார்க்குகளை எடுத்து விட வேண்டும். கீழே படத்தில் காண்க.
பின்னர் கீழே DOWNLOAD பட்டனை அழுத்தினால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்.
பின்னர் மீண்டும் DOWNLOAD பட்டனை அழுத்தினால் கீழ்க்கண்டவாறு ஓபன் ஆகும்.
இப்பொழுது எல்லா பாடல்களும் ஒவ்வொன்றாக தரவிறங்க ஆரம்பிக்கும். தரவிறக்கத்தை PAUSE செய்யும் வசதி உள்ளது. இணைய இணைப்பு வேகமாக இருக்கும் நேரத்தில் PLAY செய்து மீண்டும் தரவிறகத்தை தொடரலாம். தரவிறக்கம் முடிந்ததும் கணினி தானாக SHUTDOWN ஆகுமாறு செய்ய வேண்டுமானால் மேலே TOOLS என்பதை கிளிக் செய்து SHUTDOWN PC WHEN DONE என்ற OPTION ஐ டிக் செய்தால் போதும். 

TAMILBEAT இல் எப்படி?
மேலே படத்தில் கடைசி கட்டத்தை ரைட் கிளிக் செய்து இரண்டாவது OPTION ஐ SELECT (கீழே படம் பார்க்க) செய்து மேற்கண்ட முறை மூலம் தரவிறக்கம் செய்யலாம்.

FLASHGET மூலம் TORRENTகளையும் தரவிறக்கம் செய்யலாம். தனியாக  TORRENT DOWNLOAD MANAGER INSTALL செய்ய அவசியம் இல்லை. இதற்கும் PAUSE/PLAY ஒத்து வரும். தேவைப்படும் பொழுது தரவிறக்கம் செய்யலாம்.

TAMILWIRE இல் தரவிறக்கம் செய்யாமலே அனைத்து பாடல்களையும் வரிசையாக கேட்க ஒரு எளிய வசதி உள்ளது. கீழே படத்தில் இடது பக்கமாக ஒரு பட்டன் இருக்கிறதே, அந்த பட்டனை கிளிக் செய்தால் அடுத்த படத்தில் இருப்பது போல ஓபன் ஆகும். அங்கே PLAY பட்டனை அழுத்தி பாடல்களை கேட்கலாம்.


நண்பர்களே, ஒரு இணைய பக்கத்தில் உள்ள பாடல்களை ஒரே கிளிக் மூலம் தரவிறக்கம் செய்யும் முறையை சொல்லியுள்ளேன். தெரிந்தவர்கள் விட்டு விடலாம். தெரியாதவர்கள் குறித்து கொள்ளுங்கள்.
இம்முறை TAMILWIRE , TAMILBEAT தளங்களில் சோதனை செய்து பார்த்தேன். மற்ற தளங்களில் தரவிறக்க சோதனை செய்யவில்லை.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment